ஹோர்முஸ் நீரிணை அமெரிக்காவுக்கும் அதன் கடற்படைக்கும் சொந்தமானது: டிரம்ப் மீண்டும் வலியுறுத்தல்
ஹோர்முஸ் நீரிணை அமெரிக்காவுக்கும் அதன் கடற்படைக்கும் சொந்தமானது என்று டிரம்ப் கூறியிருப்பது குறித்து...
வாஷிங்டன்: ஹோர்முஸ் நீரிணை அமெரிக்காவுக்கும் அதன் கடற்படைக்கும் சொந்தமானது என்று மீண்டும் வலியுறுத்திய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அங்குள்ள அமெரிக்கக் கடற்படையின் இருப்பை ஈரானுக்கு எதிரான ஒரு பயனுள்ள முற்றுகை நடவடிக்கை என்றும் தெரிவித்தார்.
ஈரான் - அமெரிக்கா இடையே கடந்த பிப் 28 ஆம் தேதி தொடங்கிய போர் பேச்சுவார்த்தைகளில் உடன்பாடு எட்டப்படாததால் தற்போது வரை தொடர்ந்து வருகிறது.
ஈரான் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல்களின் விளைவாக உலகளவில் முக்கிய எண்ணெய் வழிப் போக்குவரத்தான ஹோர்முஸ் நீரிணையை ஈரான் முடக்கியுள்ளது. இதனால், உலகின் பல நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் விலைவாசி உயர்வு போன்ற பிரச்னைகள் நிலவி வருகின்றன.
Advertisement
Advertisement
இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வர பல நாடுகள் மத்தியஸ்தத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், அமெரிக்கா - ஈரான் இடையே மறைமுகப் பேச்சுவார்த்தைகள் பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்காவின் ஒரு பகுதி என்றும், ஹோர்முஸ் நீரிணை அமெரிக்காவுக்கும் அதன் கடற்படைக்கும் சொந்தமானது என்று டிரம்ப் தெரிவித்தார்.
பின்னர் வளைகுடா நாட்டின் வரைபடத்தில் ஹோர்முஸ் நீரிணை உள்ள பகுதியை வட்டமிட்டு, அதனை டிரம்ப் நீரிணை என்று குறிப்பிட்டுள்ள ஒரு படத்தை டொனால்ட் டிரம்ப் பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்த நிலையில், ஹோர்முஸ் நீரிணை அமெரிக்காவுக்கும் அதன் கடற்படைக்கும் சொந்தமானது, இந்த கடல் வழித்தடம் அமெரிக்காவின் கட்டுப்பாட்டுல்தான் உள்ளது என டிரம்ப் மீண்டும் திட்டவட்டமாக வலியுறுத்தியுள்ளார்.
ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் கடல்வழிப் போக்குவரத்தின் மீதான அமெரிக்காவின் கட்டுப்பாடு குறித்து மீண்டும் செவ்வாய்க்கிழமை டிரம்ப் வலியுறுத்தினார்.
ஹோர்முஸ் நீரிணை "அமெரிக்கக் கடற்படைக்கும் அமெரிக்காவுக்கும் சொந்தமானது" என்று கூறிய டிரம்ப், அங்குள்ள அமெரிக்கக் கடற்படையின் இருப்பை ஈரானுக்கு எதிரான ஒரு பயனுள்ள முற்றுகை நடவடிக்கை என்று கூறினார்.
அமெரிக்காவின் கடல்சார் தொழில் தளத்தை விரிவுபடுத்தும் முயற்சிகளின் ஒரு பகுதியாக மேரிலாந்தின் ஸ்பாரோஸ் பாயிண்டில் புதிய கப்பல் கட்டும் தளம் அமைக்கப்படும் என அறிவித்த டிரம்ப், "வரலாற்றிலேயே மிகவும் பயனுள்ள மற்றும் ஊடுருவ முடியாத முற்றுகைகளில் ஒன்றை" அமெரிக்கக் கடற்படை செயல்படுத்தி வருவதாகக் கூறினார்.
எந்தக் கப்பலும் - அதாவது ஒன்று கூட - உள்ளே நுழைய முடியாத வகையிலான அத்தகைய முற்றுகையை யாரும் பார்த்ததில்லை என்று கூறிய டிரம்ப், ஈரானுக்கு வெளியிலிருந்து வரும் எண்ணெய் ஏற்றுமதி அளவு முன்பைவிட மிக உயர்ந்துள்ளதாக குறிப்பிட்டார்.
அந்த நீர்வழிப்பாதை வழியாகச் செல்ல முயற்சிக்கும் கப்பல்கள் எவ்வாறு கையாளப்படுகின்றன என்பது குறித்தும் டிரம்ப் பேசினார்.
அப்போது, அமெரிக்காவின் தடைகளை மீறி ஹோர்முஸ் நீரிணைய கடந்து செல்ல முயலும் ஈரான் நாட்டு கப்பல்கள் தாக்கப்படும் என்றும், அப்போது கப்பலில் எண்ணெய் இருந்தால் அதன் கட்டுப்பாட்டு அறையைத் தாக்குவோம். எண்ணெய் இல்லையென்றால், நாங்கள் அந்தக் கப்பலையே மூழ்கடித்துவிடுவோம் என்று அவர் பகிரங்கமாக எச்சரித்துள்ளார்.
பின்னர், ஹோர்முஸ் நீரிணையின் முக்கியத்துவம் குறித்து பேசிய டிரம்ப், ஹார்முஸ் நீரிணை அமெரிக்காவுக்கும் அதன் கடற்படைக்கும் சொந்தமானது. தற்போது அது அப்படித்தான் இருக்கிறது. அமெரிக்கா உலகின் முன்னணி கடற்படை சக்தியாகத் தொடர்ந்து நீடிக்கும் என்றும் டிரம்ப் கூறினார்.
மேலும், அனைவரது உதவியுடன், உலகின் அசைக்க முடியாத கடற்படை வல்லரசாக அமெரிக்கா தொடர்ந்து திகழும் என்று அவர் கூறினார்.
அதே நிகழ்வில், ஈரான் விவகாரத்தில் அமெரிக்கா மிகச் சிறப்பாக செயல்பட்டு வருவதாகக் கூறிய டிரம்ப், அந்நாட்டின் ராணுவம் கடுமையாக பலவீனப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்த டிரம்ப், அவர்களிடம் ராணுவம் என்று எதுவும் இல்லை; அது சிதைக்கப்பட்டுவிட்டது, அந்த நாடே சீர்குலைந்து போயுள்ளது. அவர்கள்தான் தீய சக்தியாகவும், மத்திய கிழக்கில் மற்றவர்களை அச்சுறுத்தும் சக்தியாகவும் இருந்தனர். இப்போது அவர்கள் அந்த அளவுக்கு அச்சுறுத்தும் நிலையில் இல்லை என்றாலும், நாங்கள் இந்த விவகாரத்தை முழுமையாக முடிக்க வேண்டியுள்ளது. இந்த மோதலை எப்படி முடித்த வேண்டும் என்பது ஈரானின் போக்கை பொறுத்தது. மோதலை நல்ல வழியிலா அல்லது கடுமையான வழியிலா என்பதுதான் கேள்வி; அது எத்தகையது என்பதை ஈரானியர் விரைவில் தெரிந்துகொள்வார்கள் என்று டிரம்ப் எச்சரித்துள்ளார்.
ஹோர்முஸ் நீரிணையில் அமெரிக்காவின் நடவடிக்கைகள் குறித்துப் பேசிய டிரம்ப், அங்கு மேற்கொள்ளப்படும் கடல்சார் நடவடிக்கைகளை 'கடல்வழித் தடுப்பு' என்று கூறாமல், 'இரும்பு தடுப்புச் சுவர்' என்று அழைப்பதாக தெரவித்தார்.
ஈரான் அணு ஆயுதத்தைப் பெறாமல் இருப்பதை அமெரிக்கக் கடற்படை உறுதி செய்து வருவதாகவும் டிரம்ப் மேலும் கூறினார்.
ஈரானுடனான மோதல் நீடித்து வரும் நிலையில், ஹோர்முஸ் நீரிணை மீதான தனது கட்டுப்பாட்டை டிரம்ப் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்; இந்த முக்கியத்துவம் வாய்ந்த கடல்வழிப் பாதையில் ஈரானியக் கப்பல்கள் மற்றும் துறைமுகங்களுக்கான போக்குவரத்தை அமெரிக்கக் கடற்படை கட்டுப்படுத்தியுள்ளதாக அவர் மீண்டும் மீண்டும் கூறி வருகிறார்.
இதையடுத்து ஹோர்முஸ் நீரிணை விவகாரத்தில் டிரம்ப் தனது பிடியைத் தளர்த்தப் போவதில்லை என்பது தெளிவாகியுள்ளது.
US President Donald Trump on Tuesday reiterated his claims about US control over maritime traffic through the Strait of Hormuz
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.