FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

சிறார் வன்கொடுமை விவகாரம்! பிரிட்டன் இளவசர் ஹாரியின் மாமனார் கைது!

பிரிட்டன் இளவரசர் ஹாரியின் மாமனார் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளது குறித்து...

மனைவி மேகன் மார்க்கல் உடன் பிரிட்டன் இளவரசர் ஹாரி... - AP
பகிர்:

பிரிட்டன் இளவரசர் ஹாரியின் மாமனார் சிறார் வன்கொடுமை தொடர்பான குற்றச்சாட்டில் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸின் இளைய மகனான இளவரசர் ஹாரி, அமெரிக்காவைச் சேர்ந்த நடிகை மேகன் மார்க்கலை கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.

இந்த நிலையில், சிறார் வன்கொடுமை சார்ந்த புகைப்படங்கள் வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ், மேகன் மார்க்கலின் தந்தையான தாமஸ் மார்க்கலை அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாண அதிகாரிகள் இன்று (நவ. 6) கைது செய்துள்ளனர்.

Advertisement

Advertisement

பிலிப்பின்ஸ் நாட்டிலுள்ள தாமஸின் வீட்டை காலி செய்தபோது, சிறார் வன்கொடுமை தொடர்பான புகைப்படங்களை அவர் அங்கு வைத்திருந்ததை, மேகன் மார்க்கலின் சகோதரர் கண்டெடுத்துள்ளார்.

இந்த விவகாரம் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியதைத் தொடர்ந்து, தற்போது தாமஸ் மார்க்கல் கைது செய்யப்பட்டுள்ளார்.

முன்னதாக, இளவரசர் ஹாரி மற்றும் மேகன் மார்க்கலின் திருமணத்தில் அவரது தந்தை தாமஸ் பங்கேற்காதது அப்போது பெரும் பேசுபொருளானது.

குடும்பத்தை விட்டு பிரிந்து பிலிப்பின்ஸ் நாட்டில் தாமஸ் வசித்து வந்த நிலையில், உடல் நலக் குறைவின் காரணமாக நிகழாண்டில் (2026) அவர் மீண்டும் அமெரிக்காவுக்குத் திரும்பி வந்தார்.

இதையடுத்து, பிலிப்பின்ஸில் அவர் வசித்து வந்த வீட்டில் ஆயிரக்கணக்கான சிறார் வன்கொடுமை புகைப்படங்களைக் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து அவரது மகன் பிலிப்பின்ஸ் மற்றும் அமெரிக்க அதிகாரிகளிடம் புகாரளித்தது குறிப்பிடத்தக்கது.

summary

The father-in-law of Britain's Prince Harry has been arrested in the United States on charges related to child abuse.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.