FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

பட்டாசு குப்பைகளால் நிறைந்த நியூ ஜெர்சி தெருக்கள்! இந்தியர்களுக்கு வலுக்கும் கண்டனம்!

நியூ ஜெர்சியில் பட்டாசு வெடித்து தீபாவளி கொண்டாடிய இந்தியர்களுக்கு வலுக்கும் கண்டனம்...

பட்டாசு குப்பைகளால் நிறைந்த நியூ ஜெர்சி தெருக்கள் - Photo: x
பகிர்:

அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் தீபாவளி பண்டிகை கொண்டாடிய இந்தியர்கள் பட்டாசு கழிவுகளை அகற்றாமல் சாலைகளிலேயே போட்டுச் சென்றது பெரும் விவாதத்துக்குள்ளாகியுள்ளது.

நியூ ஜெர்சி மாகாணத்தில் உள்ள ஜெர்சி சிட்டி மற்றும் இந்தியா ஸ்கொயர் பகுதிகளில் கடந்த நவம்பர் 8 ஆம் தேதி பெருமளவிலான இந்தியர்கள் திரண்டு தீபாவளி பண்டிகையைக் கொண்டாடினர்.

பட்டாசுகளையும் வாண வேடிக்கைகளையும் வெடித்து மக்கள் தீபாவளி பண்டிகையைக் கொண்டாடிய நிலையில், கொண்டாட்டத்துக்கு பிறகு பட்டாசு கழிவுகள், அட்டைப் பெட்டிகள், சாம்பல் உள்ளிட்ட குப்பைகளை அப்புறப்படுத்தாமல் சாலைகளிலேயே விட்டுச் சென்றது பெரும் விவாதத்துக்குள்ளாகியுள்ளது.

Advertisement

Advertisement

மேலும், கொண்டாட்டத்துக்கு பிறகு நியூ ஜெர்சியின் முக்கியச் சாலைகள் முழுவதும் கடும் புகைமூட்டத்தால் சூழ்ந்ததால் காற்றுமாசு அபாயம் ஏற்பட்டது.

இந்த நிலையில், நியூ ஜெர்சி தெருக்கள் முழுவதும் பட்டாசு கழிவுகளால் நிறைந்திருக்கும் காட்சிகள் இணையத்தில் வைரலாகப் பகிரப்பட்டு வருகின்றன.

இதனிடையே, நியூ ஜெர்சியில் குவிந்திருக்கும் குப்பைகளை அந்நாட்டின் தீயணைப்பு வீரர்கள் அகற்றி, சாலைகளில் தண்ணீர் பீய்த்தி அடித்து சுத்தம் செய்யும் காணொலிகளும் இணையத்தில் பகிரப்பட்டுள்ளது.

மேலும், பிற நாடுகளின் மரபையும் பொது இடங்களையும் மதித்து நடக்க இந்தியர்கள் கற்றுக் கொள்ள வேண்டும் என்று இணையத்தில் கண்டனம் எழுந்து வருகின்றன.

summary

New Jersey streets littered with firework debris! Growing criticism directed at Indians!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.