2 வது நாளாக ரஷியா-உக்ரைன் இடையே அமைதிப்பேச்சு! டிரம்ப்பின் மருமகன் தலைமையில்!
அபுதாபியில் 2 ஆவது நாளாக அமெரிக்கா தலைமையில் ரஷியா - உக்ரைன் அமைதிப்பேச்சு...
ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் அமெரிக்கா அரசின் தலைமையில் 2 ஆவது நாளாக ரஷியா மற்றும் உக்ரைன் இடையே அமைதிப்பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
ரஷியா மற்றும் உக்ரைன் இடையே கடந்த 5 ஆண்டுகளாக நடைபெற்று வரும் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக, அமெரிக்கா அரசின் தலைமையில் செவ்வாய்க்கிழமை (நவ. 11) முதல் இருநாடுகளின் பிரதிநிதிகளும் அமைதிப்பேச்சில் ஈடுபட்டு வருகின்றனர்.
Advertisement
Advertisement
ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபி நகரத்தில் நடைபெற்று வரும் இந்தப் பேச்சுவார்த்தைகளை, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் மருமகன் ஜாரெட் குஷ்னர் மற்றும் சிறப்புப் பிரதிநிதி ஸ்டீவ் விட்கோஃப் உள்ளிட்டோர் தலைமையேற்று நடத்துகின்றனர்.
இத்துடன், இந்தப் பேச்சுவார்த்தைகளில் விளாதிமீர் மெடின்ஸ்கி தலைமையிலான ரஷிய பிரதிநிதிகளும், உக்ரைனின் வெளிநாட்டு உளவுத்துறையின் தலைவர் ரஸ்தெம் உமெரோவ் தலைமையிலான உக்ரைனின் பிரதிநிதிகளும் பங்கேற்றுள்ளனர்.
ஏற்கெனவே, செவ்வாய்க்கிழமை சுமார் 4 மணிநேரம் பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற நிலையில், தொடர்ந்து 2 ஆவது நாளாக புதன்கிழமையும் முத்தரப்புப் பேச்சுவார்த்தைகள் தொடங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்துடன், அமெரிக்கா, ரஷியா உடனான பேச்சுவார்த்தைகளில் பங்கேற்கும் உக்ரைனின் பிரதிநிதிகள் ஐரோப்பிய ஒன்றியத்தின் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்வதாகக் கூறியுள்ளனர்.
இந்தப் பேச்சுவார்த்தைகளுக்காக, நேட்டோ அமைப்பின் அதிகாரிகளும், ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகளும் அபுதாபியில் திரண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.