FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

உக்ரைன் உடன் அமைதிப்பேச்சு! புதினை சந்திக்க ரஷியா செல்லும் டிரம்ப்பின் மருமகன்!

அபுதாபியில் நடைபெறும் அமைதிப்பேச்சுகளுக்குப் பிறகு அதிபர் புதினை சந்திக்க அமெரிக்க பிரதிநிதிகள் ரஷியா செல்வது குறித்து...

11 நவம்பர் 2026, 9:49 pm
ரஷிய அதிபர் புதின் - AP
பகிர்:

ரஷியா மற்றும் உக்ரைன் இடையேயான அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு ரஷிய அதிபர் விளாதிமீர் புதினை சந்திக்க அமெரிக்க பிரதிநிதிகள் மாஸ்கோவுக்குச் செல்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில், அமெரிக்கா தலைமையில் ரஷியா மற்றும் உக்ரைன் இடையே அமைதிப் பேச்சுவார்த்தைகள் 2 ஆவது நாளாக இன்று (நவ. 11) நடைபெற்றுள்ளன.

Advertisement

Advertisement

இந்தப் பேச்சுவார்த்தைகளை, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் மருமகன் ஜாரெட் குஷ்னர் மற்றும் சிறப்புப் பிரதிநிதி ஸ்டீவ் விட்கோஃப் உள்ளிட்டோர் தலைமையேற்று நடத்துகின்றனர்.

இதனைத் தொடர்ந்து, ரஷியா மற்றும் உக்ரைன் அரசுகள் மிகப் பெரியளவில் போர்க் கைதிகளை விடுவிக்க ஒப்புக்கொண்டதாகவும், பேச்சுவார்த்தைகளில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், ஜாரெட் குஷ்னர் கூறியுள்ளார்.

இந்த நிலையில், ஜாரெட் குஷ்னர் மற்றும் ஸ்டீவ் விட்கோஃப் உள்ளிட்டோர் தலைமையிலான அமெரிக்க பிரதிநிதிகள், ரஷிய அதிபர் புதினை சந்திக்க நாளை அபுதாபியில் இருந்து மாஸ்கோ செல்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்துடன், மாஸ்கோ பயணத்துக்குப் பிறகு குஷ்னர் மற்றும் விட்கோஃப் ஆகியோர் அயர்லாந்தில் நடைபெறும் ஐரோப்பிய மாநாட்டில் பங்கேற்று அங்கு உக்ரைன் அதிபர் வொலோதிமீர் ஸெலன்ஸ்கி உடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது குறிப்பிடத்தக்கது.

summary

American representatives are traveling to Moscow to meet Russian President Putin following peace talks between Russia and Ukraine.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.