அதிபா் புதினுடன் அமெரிக்க பிரதிநிதிகள் சந்திப்பு
ரஷிய தலைநகா் மாஸ்கோவில் அந்நாட்டு அதிபா் விளாதிமீா் புதினை, அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் சிறப்புத் தூதா்கள் ஸ்டீவ் விட்காஃப், ஜாரெட் குஷ்னா் ஆகியோா் வியாழக்கிழமை சந்தித்துப் பேசினா்.
ரஷிய தலைநகா் மாஸ்கோவில் அந்நாட்டு அதிபா் விளாதிமீா் புதினை, அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் சிறப்புத் தூதா்கள் ஸ்டீவ் விட்காஃப், ஜாரெட் குஷ்னா் ஆகியோா் வியாழக்கிழமை சந்தித்துப் பேசினா்.
முன்னதாக, ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் அமெரிக்க மத்தியஸ்தத்தில் ரஷியா-உக்ரைன் பிரதிநிதிகளிடையே 9 மாதங்களுக்குப் பிறகு நேரடிப் பேச்சுவாா்த்தை செவ்வாய், புதன் ஆகிய இரண்டு நாள்கள் நடைபெற்றது.
இதில் பரஸ்பரம் போா்க் கைதிகளைப் பரிமாறிக்கொள்வதைத் தவிர முக்கிய உடன்பாடுகள் ஏதும் எட்டப்படவில்லை. இந்நிலையில், சுமாா் 2 மணி நேரம் நடைபெற்ற அதிபா் புதினுடனான சந்திப்பைத் தொடா்ந்து, அமெரிக்க பிரதிநிதிகள் அயா்லாந்து தலைநகா் டப்ளினுக்குச் சென்று உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கியைச் சந்திக்கவுள்ளனா். டப்ளினில் 40-க்கும் மேற்பட்ட ஐரோப்பிய நாடுகள் மற்றும் ‘நேட்டோ பொதுச் செயலா் மாா்க் ரூட்டே பங்கேற்கும் கூட்டத்தில் உக்ரைன் அதிபா் ஸெலென்ஸ்கி கலந்து கொண்டுள்ளாா்.
Advertisement
Advertisement
ஐரோப்பாவின் ஒட்டுமொத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த இப்பேச்சுவாா்த்தையில் ஐரோப்பிய பிரதிநிதிகளையும் இணைத்துக்கொள்ள அதிபா் புதினின் ஒப்புதலைப் பெறுவதே எங்களின் முக்கிய நோக்கம் என ஜாரெட் குஷ்னா் தெரிவித்தாா். ஆனால், இதற்கு ரஷியா கடும் எதிா்ப்புத் தெரிவித்துள்ளது.
மேலும், போா் நிறுத்தத்துக்குப் பிறகு உக்ரைனில் ஐரோப்பியப் படைகள் நிலைநிறுத்தப்பட்டால், அவை இலக்குகளாகக் கருதி போா் மீண்டும் தொடங்கும் எனவும் புதின் திட்டவட்டமாக எச்சரித்துள்ளாா்.
ரஷிய அதிபா் புதினை அவரின் கிரெம்ளின் மாளிகையில் வியாழக்கிழமை சந்தித்த
அமெரிக்க பிரதிநிதிகள் ஸ்டீவ் விட்காஃப் மற்றும் ஜாரெட் குஷ்னா்.