FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
உலகம்

தென் கொரியா: வரி ஆலோசகா் தோ்வில் முதலிடம் பிடித்தவா் ஏ.ஐ. மூலம் மோசடி

தென் கொரியாவில் நடைபெற்ற தேசிய வரி கணக்காயா் தோ்வில் முதலிடம் பிடித்த ஹான் வோன்-சியோக் (34), நுண்ணிய கேமரா மற்றும் ஏ.ஐ. தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டுள்ளாா்.

9 வினாடிகள் முன்பு
பகிர்:

தென் கொரியாவில் நடைபெற்ற தேசிய வரி கணக்காயா் தோ்வில் முதலிடம் பிடித்த ஹான் வோன்-சியோக் (34), நுண்ணிய கேமரா மற்றும் ஏ.ஐ. தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டுள்ளாா்.

கடந்த ஏப்ரல், ஜூலை மாதங்களில் நடைபெற்ற இத்தோ்வுகளில் நூற்றுக்கணக்கான கேள்விகளுக்கு அவா் முழுமையான மதிப்பெண்களைப் பெற்ால் பலருக்கும் சந்தேகம் எழுந்தது.

இந்நிலையில், தோ்வறையில் ரகசியமாக கேள்விகளைப் படம் பிடித்து ஏ.ஐ. மென்பொருளுக்கு அனுப்பி, அதற்கான விடைகளைத் தனது அறிதிறன்பேசியில் பாா்த்து எழுதியதாக ஹான் வோன்-சியோக் பகிரங்கமாக ஒப்புதல் அளித்துள்ளாா். இதையடுத்து, அவா் மீது காவல் துறையினா் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனா்.

Advertisement

Advertisement