FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

அமெரிக்கா முழுவதும் வங்கிகள் சேவை முடங்கியது!

அமெரிக்கா முழுவதும் வங்கிகள் சேவை முடங்கியது பற்றி...

24 வினாடிகள் முன்பு
அமெரிக்கா முழுவதும் வங்கிகள் சேவை முடங்கியது - AP
பகிர்:

அமெரிக்காவில் உள்ள முன்னணி வங்கிகளில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

உலக அளவில் அவுட்லுக், டீம்ஸ் போன்ற மைக்ரோசாஃப்ட் 365 தகவல் பரிமாற்றச் சேவைகள் கடந்த வெள்ளிக்கிழமை முடங்கின. சர்வர் பிரச்னை காரணமாக ஏற்பட்ட இந்த கோளாறு 24 மணிநேரத்துக்கு பிறகு சரி செய்யப்பட்டது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், அமெரிக்காவின் முன்னணி வங்கிகளான பாங்கு ஆஃப் அமெரிக்கா, ஜேபி மார்கன், யு.எஸ். வங்கி, வெல்ஸ் ஃபார்கோ உள்ளிட்ட வங்கிகளின் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால், ஏடிஎம்-களில் பணம் எடுக்க முடியாமலும், ஆன்லைனின் பணப்பரிமாற்றம் செய்ய முடியாமலும் மக்கள் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர்.

அமெரிக்காவின் முன்னணி வங்கிகள் பயன்படுத்தும் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை தளமான ஜெல்லேவும் (Zelle) முடங்கியுள்ளது.

இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள ஜேபி மோர்கன் சேஸ் வங்கி, “வங்கிகளின் ஹார்டுவேரில் ஏற்பட்ட கோளாறால் தற்காலிகச் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது சைபர் தாக்குதல் தொடர்பானது என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை. இதனால் சில வாடிக்கையாளர்களுக்குச் சேவை வழங்குவதில் வழக்கத்தை விட அதிக நேரம் எடுத்துக்கொள்ளப்படுகிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேபோல், பாங்கு ஆஃப் அமெரிக்காவின் தளத்தை அணுகும் வாடிக்கையாளர்களுக்கு, ”இந்த தளம் தற்போது செயலிழந்துள்ளது. மன்னிக்கவும், சிறிது நேரம் கழித்து மீண்டும் முயற்சிக்கவும்” என்ற குறுஞ்செய்தி வருவதாக வாடிக்கையாளர்கள் புகார் எழுப்பியுள்ளனர்.

- AP

மேலும், ஆன்லைன் சேவைகள் முழுவதும் முடங்கியிருக்கும் சூழலில், சில வங்கிகளின் ஏடிஎம்-களும் முடங்கியிருப்பதாலும், பணம் காலியாகிவிட்டதாலும் மக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர்.

summary

Banking services disrupted across the United States!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.