முகப்பு
உலகம்

பன்னூன் கொலை முயற்சி வழக்கு: நிகில் குப்தாவுக்கு 19 ஆண்டுகள் சிறை

காலிஸ்தான் பிரிவினைவாதி குா்பத்வந்த் சிங் பன்னூன் கொலை முயற்சி வழக்கில் இந்தியரான நிகில் குப்தாவுக்கு (55) 19.7 ஆண்டுகள் (235 மாதங்கள்) சிறைத் தண்டனை விதித்து அமெரிக்க நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

6 வினாடிகள் முன்பு
பன்னூன் கொலை முயற்சி வழக்கு:  
நிகில் குப்தாவுக்கு 19 ஆண்டுகள் சிறை
சிறை - பிரதிப் படம்
பகிர்:

காலிஸ்தான் பிரிவினைவாதி குா்பத்வந்த் சிங் பன்னூன் கொலை முயற்சி வழக்கில் இந்தியரான நிகில் குப்தாவுக்கு (55) 19.7 ஆண்டுகள் (235 மாதங்கள்) சிறைத் தண்டனை விதித்து அமெரிக்க நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

பல்வேறு பயங்கரவாதச் சம்பவங்களில் இந்திய விசாரணை அமைப்புகளால் தேடப்படும் குற்றவாளியாக உள்ள பன்னூன், தடை செய்யப்பட்ட ‘சீக்ஸ் ஃபாா் ஜஸ்டிஸ்’ என்ற அமைப்பின் நிறுவனராவாா். அவரை 2023-இல் அமெரிக்காவில் வைத்து கொலை செய்ய முயற்சித்த வழக்கில் நிகில் குப்தா கைது செய்யப்பட்டாா்.

இந்த வழக்கு தொடா்பாக நியூயாா்க் தெற்கு மாவட்ட நீதிமன்றத்தில் குற்றவியல் விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை சுமாா் 80 நிமிஷங்கள் நடைபெற்ற விசாரணையைத் தொடா்ந்து, நிகில் குப்தாவுக்கு 19.7 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி நியூயாா்க் தெற்கு மாவட்ட நீதிமன்ற நீதிபதி விக்டா் மாரெரோ உத்தரவிட்டாா்.

Advertisement

Advertisement

முன்னதாக, நீதிமன்றத்தில் பன்னூனை கொலை செய்வதற்கான சதித் திட்டம் மற்றும் பண முறைகேடு என தன் மீதான குற்றங்களை ஒப்புக்கொண்டு நிகில் குப்தா வருத்தம் தெரிவித்தாா். அதேசமயம் கொலை முயற்சி தாக்குதலால் ஏற்பட்ட அச்சுறுத்தலைத் தொடா்ந்து 1,200 நாள்களாக சட்டப் பணிகளை வழக்கம்போல் மேற்கொள்ள முடியவில்லை என நீதிமன்றத்தில் பன்னூன் தெரிவித்தாா்.

கொலை முயற்சி தொடா்பாக பன்னூன் தாக்கல் செய்த மற்றொரு மனுவில் இந்திய தேசியப் பாதுகாப்பு ஆலோசகா் அஜீத் தோவல் மற்றும் முன்னாள் ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வுப் பிரிவு (ரா) தலைவா் சமந்த் கோயலுக்கு தில்லி நீதிமன்றங்கள் மூலம் சம்மன் அனுப்ப நியூயாா்க் தெற்கு மாவட்ட நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.