முகப்பு

பிலிப்பைன்ஸில் அவசரமாக தரையிறக்கப்பட்ட ஏர் நியூகினி விமானம்!

ஹாங்காங்கிலிருந்து பப்புவா நியூ கினியாவின் போர்ட் மோர்ஸ்பியாவுக்கு சென்ற ஏர் நியூகினி விமானம் பிலிப்பைன்ஸில் அவரசமாக தரையிறக்கப்பட்டது குறித்து...

பிலிப்பைன்ஸில் அவசரமாக தரையிறக்கப்பட்ட ஏர் நியூகினி விமானம்!
பிலிப்பைன்ஸில் அவசரமாக தரையிறக்கப்பட்ட ஏர் நியூகினி விமானம் - எக்ஸ்
பகிர்:

மணிலா: ஹாங்காங்கிலிருந்து பப்புவா நியூ கினியாவின் போர்ட் மோர்ஸ்பியாவுக்கு சென்ற ஏர் நியூகினி விமானம் பிலிப்பைன்ஸில் பாதுகாப்பாக அவரசமாக தரையிறக்கப்பட்டது.

ஹாங்காங்கிலிருந்து பப்புவா நியூ கினியாவின் போர்ட் மோர்ஸ்பியாவுக்கு சென்ற ஏர் நியூகினி விமானம், அதன் வலதுபுற எஞ்சினில் தீப்பிடித்திருக்கலாம் என்ற எச்சரிக்கை அறிகுறியை அடுத்து, பிலிப்பைன்ஸின் தெற்கு நகரமொன்றில் சனிக்கிழமை அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானத்தில் இருந்த 146 பேரும் பதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக பிலிப்பைன்ஸ் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக பிலிப்பைன்ஸ் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஹாங்காங்கிலிருந்து பப்புவா நியூ கினியாவின் போர்ட் மோர்ஸ்பியாவுக்கு சென்று கொண்டிருந்த ஏர் நியூகினி நிறுவனத்தில் போயிங் 767-383ER ரக விமானத்தின் வலதுபுற எஞ்சினில் தீப்பிடித்திருக்கலாம் என்ற எச்சரிக்கை அறிகுறியை விமானிகள் கண்டுள்ளனர்.

Advertisement

Advertisement

இதையடுத்து விமானிகள் உரிய பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றி, தாவோ விமான நிலையத்தில் அவசரகால தரையிறக்கத்திற்கு அனுமதி கோரினர்.

இதனைத்தொடர்ந்து விமானம் தனது பயணப் பாதையிலிருந்து திசைதிருப்பப்பட்டு, நள்ளிரவுக்குப் பின்னர் தாவோ சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. விமானத்தில் இருந்த 137 பயணிகள் மற்றும் 9 பணியாளர்கள் அனைவரும் அவசரகால பாதைகள் வழியாகப் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். யாருக்கும் எந்தக் காயமும் ஏற்படவில்லை.

பயணிகளும் பணியாளர்களும் விமான நிலைய முனையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, அவர்களுக்குத் தேவையான உதவிகள் வழங்கப்பட்டன; மேலும் அவர்கள் தங்குவதற்கான ஹோட்டல் வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டதாக பிலிப்பைன்ஸ் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.

விமானத்திற்குச் சேதம் ஏற்பட்டதாக உடனடித் தகவல்கள் எதுவும் இல்லை.

இது குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும், அதில் விமானிகளின் வாக்குமூலங்களும் சேர்க்கப்படும் என்று பிலிப்பைன்ஸ் செய்தித் தொடர்பாளர் எரிக் அப்போலோனியோ கூறினார்.

அவசரகால மீட்புப் பணிகளுக்காக தாவோ விமான நிலையம் மற்ற விமானங்களின் செயல்பாட்டிற்கு மூடப்பட்டது; இதனால் இரண்டு உள்நாட்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

முதன்மை ஓடுபாதையில் பாதுகாப்புச் சோதனைகள் நிறைவடைந்த பிறகு, விமான நிலையம் மீண்டும் செயல்பாட்டிற்கு வந்ததாக பிலிப்பைன்ஸ் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.

An Air Niugini plane carrying 146 passengers and crew from Hong Kong to Papua New Guinea safely made an emergency landing Saturday in a southern Philippine city

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.