முகப்பு

அமெரிக்காவின் பொருளாதார அழுத்தம்! வளைகுடாவில் தாக்குதலைத் தீவிரமாக்கும் ஈரான்!

வளைகுடா நாடுகளின் மீது ஈரான் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தி வருவது குறித்து...

அமெரிக்காவின் பொருளாதார அழுத்தம்! வளைகுடாவில் தாக்குதலைத் தீவிரமாக்கும் ஈரான்!
ஈரான் தாக்குதல்... - கோப்புப் படம்
பகிர்:

ஈரான் மீதான அமெரிக்க அரசின் பொருளாதாரத் தடைகளைத் தொடர்ந்து, வளைகுடா நாடுகளின் மீதான தாக்குதல்களை ஈரானிய படைகள் தீவிரப்படுத்தி வருகின்றன.

பஹ்ரைன் நாட்டிலுள்ள அமெரிக்க கட்டமைப்புகளைக் குறிவைத்து ஈரானிய படைகள் இன்று (நவ. 22) ட்ரோன் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தின. ஈரானின் வான்வழியில் அமெரிக்க ட்ரோன்கள் அத்துமீறுவதற்குப் பதிலடியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகக் கூறப்பட்டது.

இந்தத் தாக்குதலுக்கு, ஜோர்டான், கத்தார், சௌதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகள் மற்றும் அரபு லீக் அமைப்பு ஆகியவைக் கண்டனம் தெரிவித்துள்ளன.

Advertisement

Advertisement

இத்துடன், கடந்த 7 நாள்களில் மட்டும் ஹோர்முஸ் நீரிணையின் வழியாகச் செல்ல முயன்ற 25 எண்ணெய்க் கப்பல்கள் தாக்குதலில் சிக்கியுள்ளன. இதனால், வளைகுடா நாடுகளின் எரிபொருள் விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

கடந்த சில மாதங்களாக வளைகுடா நாடுகளின் மீதான தாக்குதல்களை ஈரான் தவிர்த்து வந்த நிலையில், பஹ்ரைன் மற்றும் குவைத் மீதான தாக்குதல் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது. மேலும், பஹ்ரைனுக்கு ஆதரவாக ஏராளமான வளைகுடா நாடுகள் குரல் கொடுத்து வருகின்றன.

வளைகுடா பகுதியில் அமெரிக்காவின் எஃப் 16 ரக போர் விமானத்தை ஏவுகணைத் தாக்குதல் மூலம் சேதப்படுத்தியதாக, ஈரானிய படைகள் அறிவித்தன. ஆனால், அதற்கு மறுப்பு தெரிவித்த அமெரிக்க ராணுவம் வளைகுடாவில் இருக்கும் தங்களின் போர் விமானங்கள் அனைத்தும் பாதுகாப்பாக இருப்பதாகக் கூறியுள்ளது.

முன்னதாக, அமெரிக்க தடைகள் மற்றும் கடற்படையின் முற்றுகை ஆகியவற்றுக்கு இடையே ஈரான் அமைதியான பொருளாதாரப் போரையும் எதிர்கொண்டு வருவதாக, ஈரானிய அதிபர் மசூத் பெசெஷ்கியன் தெரிவித்திருந்த சூழலில் இந்தத் தாக்குதல்கள் தீவிரமடைந்து வருகின்றன.

ஈரானைச் சுற்றியுள்ள அண்டை நாடுகள் தங்களின் எல்லைகளை மூடியதுடன், ஈரானிய துறைமுகங்களில் அமெரிக்க கடற்படையின் முற்றுகை தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இதனால், ஈரானின் பொருளாதாரம் கடும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.

இதில், தாங்கள் முன்மொழியும் அமைதி ஒப்பந்தத்துக்கு ஈரானிய அரசு இணங்கும் வரையில் இந்தப் பொருளாதாரத் தடைகள் அனைத்தும் தொடரும் என அமெரிக்க அரசு கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

summary

Iranian forces are intensifying attacks on Gulf nations, following the economic sanctions imposed on Iran by the U.S. government.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.