FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

குவைத், பஹ்ரைன் மீது மீண்டும் ஈரான் தாக்குதல்! வளைகுடா நாடுகள் கண்டனம்!

குவைத் மற்றும் பஹ்ரைன் மீது ஈரான் நடத்திய தாக்குதல்களுக்கு வளைகுடா நாடுகள் கண்டனம்...

ஈரானிலுள்ள பிரிட்டன் தூதரகத்தின் சுவரில் அதிபர் டிரம்ப்புக்கு எதிராக எழுதப்பட்டுள்ள வாசகம்... - ஏபி | கோப்புப் படம்
பகிர்:

குவைத் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகளிலுள்ள முக்கிய கட்டமைப்புகளைக் குறிவைத்து ஈரானிய படைகள் நடத்திய தாக்குதலுக்கு, வளைகுடா நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

ஈரான் மீதான அமெரிக்காவின் போருக்குப் பதிலடியாக, வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க கட்டமைப்புகள் மீது ஈரானிய படைகள் தாக்குதல் நடத்தி வந்தன.

Advertisement

Advertisement

இதையடுத்து, சுமார் 2 மாதங்களுக்குப் பிறகு குவைத் மற்றும் பஹ்ரைனில் அமெரிக்க அரசின் கட்டுப்பாட்டிலுள்ள ராணுவத் தளவாடங்களைக் குறிவைத்து புதன்கிழமை (நவ. 18) காலை ஈரானிய படைகள் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளன.

இந்தத் தாக்குதல்களை, குவைத் மற்றும் பஹ்ரைனின் வான் பாதுகாப்பு அமைப்புகள் இடைமறித்துத் தகர்த்ததாகக் கூறப்படுகிறது. மேலும், அந்நாடுகளின் பல்வேறு முக்கிய நகரங்களுக்கு அபாய எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டு பின்னர் விலக்கப்பட்டன.

குவைத் நாட்டில் அமெரிக்க படைகளின் கட்டுப்பாட்டிலுள்ள அலி அல்-சலெம் விமானத் தளத்தின் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல் நடத்தியதாகவும், அங்குள்ள அமெரிக்க ராணுவத்தின் ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தளவாடங்கள் குறிவைக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதலுக்கு, ஐக்கிய அரபு அமீரகம், கத்தார் நாடுகளின் அரசுகள் மற்றும் வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் ஆகியவைக் கண்டனம் தெரிவித்துள்ளன.

முன்னதாக, ஈரானைச் சுற்றியுள்ள பகுதிகளில் அமெரிக்க படைகள் குவிக்கப்பட்டுள்ள நிலையில், அமெரிக்க விமானப் படையின் யுஎஸ்எஸ் தியோடர் ரூஸ்வெல்ட் எனும் போர் விமானம் அப்பகுதியில் புதியதாகக் களமிறக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே, யுஎஸ்எஸ் ஜார்ஜ் எச்.டபிள்யூ. புஷ் மற்றும் யுஎஸ்எஸ் ஜார்ஜ் வாஷிங்டன் ஆகியவை ஈரானுக்கு எதிராக நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதால், மீண்டும் அப்பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

summary

Gulf nations have condemned the attacks carried out by Iranian forces, which targeted key infrastructure in Kuwait and Bahrain.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.