முகப்பு

ஷேக் ஹசீனா கட்சியினருக்கு எதிராக வன்முறை! 30 வீடுகள் மீது தீவைப்பு!

வங்கதேசத்தில் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சியினருக்கு எதிராக வன்முறை...

32 வினாடிகள் முன்பு
ஷேக் ஹசீனா கட்சியினருக்கு எதிராக வன்முறை! 30 வீடுகள் மீது தீவைப்பு!
வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா - நரைல் மாவட்டத்தில் ஏற்பட்ட வன்முறை... - ANI
பகிர்:

வங்கதேசத்தில், முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் கட்சியைச் சேர்ந்த மூத்த நிர்வாகிகளின் சொத்துகளைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நரைல் மாவட்டத்தைச் சேர்ந்த பெந்தார்சர் கிராமத்தில் அவாமி லீக் கட்சியின் மூத்த தலைவர்களுக்கு எதிராக வெள்ளிக்கிழமை (நவ. 20) மதியம் முதல் நள்ளிரவு வரை வன்முறைச் சம்பவங்கள் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவத்தில், அவாமி லீக் கட்சியைச் சேர்ந்தோரின் வீடுகள் மற்றும் கடைகள் சூறையாடப்பட்டதாகவும், சுமார் 20 முதல் 30 வீடுகள் தீயிக்கு இரையானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

இதையடுத்து, சம்பவத்தில் அவாமி லீக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பி.எம். கபிருல் ஹக் முக்தி, காலியா நகராட்சியின் முன்னாள் மேயர் முஷ்பிகுர் ரஹ்மான் லிட்டன் மற்றும் உள்ளூர் கட்சிப் பொதுச்செயலர் கிருஷ்ணபதா கோஷ் ஆகியோரின் சொத்துகளும் குறிவைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த வன்முறையை பிரதமர் தாரிக் ரஹ்மான் தலைமையிலான வங்கதேச தேசியவாத கட்சியைச் (பிஎன்பி) சேர்ந்தவர்கள் நடத்தியதாக, உள்ளூர்வாசிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர். ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பிஎன்பி தரப்பில் மறுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, நராயில் மாவட்ட காவல்துறையினர் கூறுகையில், கடந்த வாரம் பிஎன்பி கட்சியைச் சேர்ந்த முத்த தலைவர் ஒருவரின் ஆதரவாளர் மற்றும் உறவினரான இருவர் வன்முறையில் கொல்லப்பட்டதாகவும், அதையடுத்து, அவாமி லீக் கட்சியின் தலைவர்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, மாணவர் போராட்டங்களைத் தொடர்ந்து ஆட்சி கவிழ்ந்து நாட்டை விட்டு தப்பியோடிய ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார்.

மேலும், வரும் டிசம்பர் மாதம் அவர் வங்கதேசத்துக்குத் திரும்புவார் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அவரது கட்சியினருக்கு எதிரான வன்முறை வெடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

summary

In Bangladesh, it has been reported that attacks have targeted the assets of senior officials belonging to former PM Sheikh Hasina's party.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.