ஆப்கனில் பள்ளியில் ஏற்பட்ட வெடிவிபத்து: 7 பேர் பலி, 90-க்கும் மேற்பட்டோர் காயம்
கிழக்கு ஆப்கானிஸ்தானில் பள்ளியில் ஏற்பட்ட வெடிவிபத்து குறித்து...

கிழக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள பள்ளியில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 7 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிழக்கு ஆப்கானிஸ்தானின் குனார் மாகாணத்தில் உள்ள பள்ளியில் சனிக்கிழமை ஏற்பட்ட வெடிவிபத்தில் 7 பேர் பலியானதோடு 90-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்று அந்நாட்டின் மாகாண கலாசாரம் மற்றும் தகவல் துறை இயக்குநர் தெரிவித்துள்ளார்.
சுரங்க நிறுவனங்களுக்குச் சொந்தமான வெடிபொருட்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்த கிடங்கில் ஏற்பட்ட கவனக்குறைவால் இந்த வெடிவிபத்து நிகழ்ந்ததாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Advertisement
Advertisement
காயமடைந்தவர்களில் 15 பேர் வரை மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் நிலையில், மற்றவர்கள் சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பியுள்ளனர் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
இச்சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.
இரும்புத் தாது, தாமிரம், ஈயம், துத்தநாகம், தங்கம், நிலக்கரி மற்றும் விலையுயர்ந்த கற்கள் உள்ளிட்ட மூலப்பொருட்கள் நிறைந்த ஆப்கானிஸ்தானில் சுரங்கத் தொழில் ஒரு முக்கியத் தொழிலாக உள்ளது.
ஆனால், சுரங்க நிறுவனங்களில் பாதுகாப்புத் தரங்கள் பெரும்பாலும் மோசமாக இருப்பதால் விபத்துகள் ஏற்படுகின்றன.