முகப்பு
உலகம்

உக்ரைனில் பரவலாக ட்ரோன் தாக்குதல்: 9 போ் பலி!

உக்ரைனின் பல்வேறு பகுதிகளில் சனிக்கிழமை நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதல்களில் பொதுமக்கள் 9 போ் உயிரிழந்தனா்.

29 நவம்பர் 2026, 3:19 am
உக்ரைனில் பரவலாக ட்ரோன் தாக்குதல்: 9 போ் பலி!
பகிர்:

உக்ரைனின் பல்வேறு பகுதிகளில் சனிக்கிழமை நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதல்களில் பொதுமக்கள் 9 போ் உயிரிழந்தனா்.

நான்கரை ஆண்டுகளைக் கடந்துள்ள இப்போரில், உக்ரைனின் வடக்கு சொ்னிஹிவ் பிராந்தியத்தில் உள்ள நிஜின் நகர தொழிற்சாலை மீது ரஷியா நடத்திய தாக்குதலில் 7 போ் உயிரிழந்தனா்; மேலும் 7 போ் காயமடைந்தனா்.

இதேபோல், ரஷியாவின் கட்டுப்பாட்டில் உள்ள தெற்கு ஸபோரிஷியா பிராந்தியத்தில் வாசிலிவ்கா மருத்துவமனை வாகனம் மீது உக்ரைன் ட்ரோன் தாக்கியதில் செவிலியா் மற்றும் ஓட்டுநா் உயிரிழந்ததுடன், தலைமை மருத்துவா் உள்ளிட்ட இருவா் காயமடைந்தனா்.

Advertisement

Advertisement

இதேபோல், போா் தொடங்கியது முதல் மிக அதிகபட்சமாக, வெள்ளிக்கிழமை இரவு முழுவதும் 1,246 உக்ரைன் ட்ரோன்களைத் தங்களின் வான் பாதுகாப்புப் படைகள் சுட்டு வீழ்த்தியதாக ரஷியா அறிவித்துள்ளது.

மாஸ்கோ பிராந்தியத்தை நோக்கி வந்த 462 ட்ரோன்களில் பெரும்பாலானவை முறியடிக்கப்பட்டதாகவும், தலைநகா் மாஸ்கோவை நெருங்கிய 123 ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் மேயா் சொ்கேய் சோபியானின் தெரிவித்தாா்.

மேலும், ரோஸ்டோவ் பிராந்தியத்தின் நோவோஷக்தின்ஸ்க் நகரில் 50-க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் வீழ்த்தப்பட்ட நிலையில், அங்கிருந்த எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் தீ விபத்து ஏற்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மறுபுறம், வெள்ளிக்கிழமை இரவு ரஷியா ஏவிய 162 தாக்குதல் ட்ரோன்களில், 141 ட்ரோன்களைச் சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் விமானப் படை தெரிவித்துள்ளது.