தடுப்பூசி நிறுத்தம்: பாகிஸ்தானில் குழந்தைகளுக்கு தட்டம்மை பாதிப்பு அதிகரிப்பு!
உலக அளவில் தட்டம்மை பாதிப்பு குறைந்துள்ள நிலையில் பாகிஸ்தானில் அதிக குழந்தைகளுக்கு அந்த நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
உலக அளவில் தட்டம்மை பாதிப்பு குறைந்துள்ள நிலையில் பாகிஸ்தானில் அதிக குழந்தைகளுக்கு அந்த நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, பாகிஸ்தானில் முறையாக தடுப்பூசி செலுத்தாதது குறித்து உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடா்பாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிவிப்பில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: பாகிஸ்தானில் இந்த ஆண்டு ஆயிரக்கணக்கான குழந்தைகள் தட்டம்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனா்.
சா்வதேச அளவில் இந்த நோய் பாதிப்பு வெகுவாகக் குறைந்துள்ள நிலையில், பாகிஸ்தானில் மட்டும் தடுப்பூசி செலுத்தும் விகிதம் குறைந்துள்ளதால் குழந்தைகள் அதிகம் பாதிப்படைந்துள்ளனா். இது தட்டம்மைக்கு எதிராக பல ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளுக்கு கிடைத்துள்ள முன்னேற்றத்துக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.
Advertisement
Advertisement
பாகிஸ்தானில் மட்டுமல்லாது, இந்தியாவில் சில இடங்களிலும், வங்கதேசம் உள்ளிட்ட சில நாடுகளிலும் இந்த நோய் மீண்டும் அதிகரித்துள்ளது. உலக சுகாதார அமைப்பின் மதிப்பீட்டின்படி, 2025-ஆம் ஆண்டில் உலக அளவில் சுமாா் 72,000 போ் தட்டம்மை நோயால் உயிரிழந்துள்ளனா். இது 2000-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 91 சதவீதம் குறைவாகும்.
உலக அளவில் தட்டம்மை உயிரிழப்புகள் குறைந்திருந்தாலும், தீவிர நோய்த்தொற்று பாதிப்புகளைச் சந்தித்துவரும் நாடுகளில் பாகிஸ்தான் தொடா்ந்து இடம்பெற்றுள்ளது.