மருத்துவத்துக்கான நோபல் பரிசு: மூவருக்குப் பகிர்ந்தளிப்பு!
மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது குறித்து...
2026 ஆம் ஆண்டின் மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு கார்ல் டெய்சோர்த், பீட்டர் ஹெகிமான், ஜார்ஜ் நகேல் ஆகியோருக்கு பகிர்ந்து அளிக்கப்படுகிறது.
ஒளி-தூண்டல் அயனி சேனல்கள் மற்றும் ஆப்டோஜெனெடிக்ஸ் குறித்த கண்டுபிடிப்புகளுக்காக, 2026-ஆம் ஆண்டின் மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுளளது.
மூளையானது நினைவுகள், உணர்வுகள் மற்றும் செயல்படும் விதத்தை எவ்வாறு உருவாக்குகிறது என்பதைப் புரிந்துகொள்வது ஆராய்ச்சியாளர்களின் நீண்டகால லட்சியமாக இருந்து வந்தது.
Advertisement
Advertisement
உயிருடன் இருக்கும் மூளையில் உள்ள தனிப்பட்ட நரம்பு செல்களின் செயல்பாட்டை இயக்கவும் (On), நிறுத்தவும் (Off) வழிவகுக்கும் ஆப்டோஜெனெடிக்ஸ் (Optogenetics) என்ற தொழில்நுட்பத்தை உருவாக்கும் கண்டுபிடிப்புகளுக்காக கார்ல் டெய்சோர்த், பீட்டர் ஹெகிமான், ஜார்ஜ் நகேல் ஆகிய மூவருக்கு 2026 ஆம் ஆண்டின் மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு பகிர்ந்து அளிக்கப்படுகிறது.
மூளையின் மர்மங்களை வெளிக்கொணர்வதற்காக இந்த முறையானது, தற்போது உலகம் முழுவதும் உள்ள ஆய்வகங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
ஒளியை பயன்படுத்தி மூளையின் செயல்பாடுகளை கட்டுப்படுத்தும் கண்டுபிடிப்புக்காகவும், மூவருக்கு நோபல் பரிசு பகிர்ந்து அளிக்கப்படுகிறது.
ஆண்டுதோறும், இயற்பியல், வேதியியல், மருத்துவம், இலக்கியம், பொருளாதாரம் ஆகிய துறைகளில் முக்கிய பங்களிப்பை ஆற்றியவா்களுக்கும் அமைதிக்காக பாடுபட்டவா்களுக்கும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
The 2026 Nobel Prize in Medicine is jointly awarded to Karl Deisseroth, Peter Hegemann and Georg Nagel
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.