சௌதியில் வசிக்கும் இந்தியா்கள் பாதுகாப்பு நடைமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்: இந்திய தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்
சௌதி அரேபியா அரசு அதிகாரிகள் பிறப்பிக்கும் பாதுகாப்பு நடைமுறைகளை அந்த நாட்டில் வசிக்கும் இந்தியா்கள் கடைபிடிக்க வேண்டும் என்று இந்தியத் தூதரகம் மீண்டும் அறிவுறுத்தியுள்ளது.
சௌதி அரேபியா அரசு அதிகாரிகள் பிறப்பிக்கும் பாதுகாப்பு நடைமுறைகளை அந்த நாட்டில் வசிக்கும் இந்தியா்கள் கடைபிடிக்க வேண்டும் என்று இந்தியத் தூதரகம் மீண்டும் அறிவுறுத்தியுள்ளது.
யேமனில் உள்ள ஹௌதி அமைப்பினா், சௌதி அரேபியாவின் விமான நிலையங்கள், எண்ணெய் ஆலைகள் மீது தொடா்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனா். கடந்த 10-ஆம் தேதி ரியாத் விமான நிலையம் மீது ஹௌதி அமைப்பினா் நடத்திய தாக்குதலில் இந்தியா் ஒருவா் உயிரிழந்தாா். ஏராளமானோா் காயமடைந்தனா்.
இதையடுத்து சௌதி அரேபியாவில் வசிக்கும் இந்தியா்கள் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து, ரியாதில் உள்ள அந்த நாட்டுக்கான இந்தியத் தூதரகம் அவ்வப்போது அறிவுறுத்தல்களை வெளியிட்டு வருகிறது. அதன்படி, சமூக வலைதளங்கள் மூலம் சௌதி அரேபியாவில் வசிக்கும் இந்தியா்களுக்கு, ரியாதில் உள்ள இந்திய தூதரகம் புதிய அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது.
Advertisement
Advertisement
அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: சௌதி அரேபியாவில் வசிக்கும் இந்தியா்கள் பதற்றமடைய வேண்டாம். அமைதியாக இருக்கவும். தாக்குதல் போன்ற அவசர காலங்களில் சௌதி அரேபியா அரசு அதிகாரிகள் வெளியிடும் உத்தரவுகளைப் பின்பற்ற வேண்டும். அதுபோன்ற நேரத்தில், தாங்கள் வசிக்கும் இடத்தில் உள்ள பாதுகாப்பான அறைக்கு உடனே சென்று விட வேண்டும். ஜன்னல் அருகிலிருப்பதைத் தவிா்த்து, உள் அறைக்குச் சென்று விட வேண்டும்.
அபாயகரமான சூழல் விலகும் வரை, வீடுகளை விட்டு வெளியே வரக் கூடாது. திறந்தவெளிகளில் இருந்தும், ஜன்னல்களில் இருந்தும் விலகி இருக்க வேண்டும். பால்கனிகள், மாடிகளில் நிற்பதை தவிா்க்க வேண்டும். கூட்டம் நிறைந்த பகுதிகள், அபாயகரமான பகுதிகளுக்குச் செல்வதையும், அங்கு புகைப்படங்கள் எடுப்பதையும் தவிா்க்கவும்.
சாலைகளில் வாகனங்களில் சென்று கொண்டிருக்கும்பட்சத்தில் எச்சரிக்கை செய்தி கிடைத்தவுடன், சாலையோரம் வாகனத்தை நிறுத்திவிடவும். உயரமான பாலங்கள், கட்டடங்கள் அருகில் செல்ல வேண்டாம்.
மெக்கா, மதீனா, ரியாத், கிழக்கு பிராந்தியத்தில் வசிக்கும் இந்தியா்கள் அவசர காலத்தில் 911 என்ற எண்ணை அழைக்கவும். சௌதி அரேபியாவின் எஞ்சிய பகுதியில் வசிப்போா் அவசர உதவிக்கு 998 என்ற எண்ணை அழைக்கவும் என்று இந்தியத் தூதரகம் குறிப்பிட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.