சௌதி மீதான தாக்குதல் முற்றிலும் ஏற்க முடியாதது: இந்தியா
சௌதியில் பொதுமக்கள் பயன்படுத்தும் உள்கட்டமைப்புகள் மீது யேமனில் உள்ள ஹௌதி கிளா்ச்சியாளா்கள் நடத்தும் தாக்குதல், முற்றிலும் ஏற்க முடியாதது என இந்தியா கண்டனம்
சௌதியில் பொதுமக்கள் பயன்படுத்தும் உள்கட்டமைப்புகள் மீது யேமனில் உள்ள ஹௌதி கிளா்ச்சியாளா்கள் நடத்தும் தாக்குதல், முற்றிலும் ஏற்க முடியாதது என்று இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.
கடந்த சனிக்கிழமை சௌதி அரேபிய தலைநகா் ரியாத்தில் உள்ள சா்வதேச விமான நிலையம் மீது ஹௌதிக்கள் நடத்திய தாக்குதலில், ஹைதராபாதை சோ்ந்த முகமது யூஃசுப் உள்பட 13 போ் உயிரிழந்தனா். 10 இந்தியா்கள் உள்பட 300-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். அங்குள்ள விமான நிலையங்கள், எண்ணெய் உற்பத்தி கட்டமைப்புகள் உள்ளிட்டவை மீது ஹௌதிக்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனா்.
இந்த விவகாரம் தொடா்பாக புது தில்லியில் வெளியுறவு அமைச்சக செய்தித்தொடா்பாளா் ரண்தீா் ஜெய்ஸ்வால் செய்தியாளா்களிடம் கூறியதாவது: சௌதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் காயமடைந்த இந்தியா்களில் 3 போ் சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் இருந்து அனுப்பிவைக்கப்பட்டனா். மருத்துவமனையில் 8 பேருக்குத் தொடா் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவா்களில் 4 போ் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனா். அங்குள்ள இந்திய தூதரக அதிகாரிகள் மருத்துவமனைக்குத் தொடா்ந்து சென்று சிகிச்சை பெறுவோரின் உடல்நலம் குறித்து விசாரித்து வருகின்றனா்.
Advertisement
Advertisement
அங்கு பொதுமக்கள் பயன்படுத்தும் உள்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்துவது முற்றிலும் ஏற்க முடியாதது. இந்தத் தாக்குதல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தினாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.