FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

அசிங்கமான பொய்! - மெக்கா தாக்குதல் குற்றச்சாட்டுக்கு ஹௌதிகள் மறுப்பு!

மெக்கா நகரத்தின் மீதான தாக்குதல் குற்றச்சாட்டுகளுக்கு யேமனின் ஹௌதிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர்...

17 செப்டம்பர் 2026, 8:38 pm IST
மெக்கா மீது ட்ரோன் தாக்குதல் - x
பகிர்:

இஸ்லாமியர்களின் புனித நகரமான மெக்காவின் மீது ட்ரோன் தாக்குதல் நடத்த முயன்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு யேமனின் ஹௌதி கிளர்ச்சிப்படை மறுப்பு தெரிவித்துள்ளது.

சௌதி அரேபியாவிலுள்ள இஸ்லாமியர்களின் புனித நகரமான மெக்காவின் மீது தாக்குதல் நடத்த ஏவப்பட்ட ட்ரோன்களை இடைமறித்து தகர்த்துள்ளதாகவும், அதை யேமனின் ஹௌதிகள் ஏவியதாகவும் சௌதி படைகள் குற்றஞ்சாட்டின.

யேமனில் சௌதி ஆதரவு பெற்ற அரசுப்படைகளுக்கும், ஹௌதிகளுக்கும் கடந்த சில நாள்களாகப் போர் வெடித்துள்ள நிலையில், மெக்கா மீதான தாக்குதல் முயற்சி சர்வதேச அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவத்துக்கு இந்தியா உள்ளிட்ட ஏராளமான நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

Advertisement

Advertisement

இந்த நிலையில், மெக்கா மீது தாக்குதல் நடத்த முயற்சி செய்ததாகக் கூறப்படுபவை அனைத்தும் சௌதியின் அசிங்கமான பொய் எனக் குறிப்பிட்டு அந்தக் குற்றச்சாட்டுகளுக்கு ஹௌதிகள் இன்று (செப். 17) மறுப்பு தெரிவித்துள்ளனர்.

இதுபற்றி, ஹௌதி படையின் தலைவர் அப்துல் மாலிக் அல்-ஹௌதி கூறுகையில்,

“சௌதியின் ஆதரவு பெற்ற படைகளுக்கு எதிரான நடவடிக்கைகளை ஹௌதிகள் முதலில் தொடங்கவில்லை. சனா விமான நிலையத்தின் மீதான தாக்குதல்களைத் தொடர்ந்து இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சௌதி அரேபியா அதன் பிரசார இயந்திரத்தைப் பயன்படுத்துகிறது. மெக்கா குறிவைக்கப்பட்டதாகக் கூறப்படுபவை அனைத்தும் அசிங்கமான பொய். இந்தப் பொய்ப் பிரசாரங்களின் மூலம் எங்கள் மக்களின் மீதான தாக்குதல்களை சௌதி அரேபியா நியாயப்படுத்த முயற்சிக்கிறது” எனக் கூறியுள்ளார்.

முன்னதாக, யேமனில் அரசுப்படைகளுக்கு எதிராக நடைபெற்று வரும் மோதல்கள் மூலம் பெரும்பாலான தளங்களை ஹௌதிகள் கைப்பற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

summary

Yemen's Houthi rebels have denied allegations that they attempted to carry out a drone attack on Mecca, the holy city of Muslims.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments