நேபாள பெருவெள்ளம்! 1,252 ஆக உயர்ந்த உயிர்ப்பலி!
நேபாள பெருவெள்ளத்தில் பலியானோர்களின் எண்ணிக்கை பற்றி...
நேபாள பெருவெள்ளத்தில் பலியானோர்களின் எண்ணிக்கை வியாழக்கிழமை (செப். 3) 1,252 ஆக உயர்ந்துள்ளது.
திபெத் - நேபாள எல்லையில் பெரும் பனிப்பாறைச் சரிவால் லெண்டே நதியில் கடந்த ஆகஸ்ட் 26 ஆம் தேதி ஏற்பட்ட பெருவெள்ளம், நேபாளத்தின் போடே கோஷி நதியில் சீறிப்பாய்ந்தது.
சகதியுடன் பல அடி உயரத்துக்கு பெருக்கெடுத்த வெள்ளத்தில் கரையோர கிராமங்கள், சிறு நகரங்கள் அடியோடு அழிந்தன. வீடுகள், கட்டடங்கள், வாகனங்கள், பாலங்கள், சாலைகள், நீா்மின் நிலையங்கள், இதர உள்கட்டமைப்புகள் அடித்துச் செல்லப்பட்டன.
Advertisement
Advertisement
இந்தப் இயற்கைப் பேரிடரில் சிக்கி இதுவரை 1,252-க்கும் மேற்பட்டோர் பலியான நிலையில், காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 4,875 ஆக உயர்ந்துள்ளது. நாளுக்குநாள் மாயமானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகின்றது.
கடந்த 9-வது நாள்களாக நேபாள தேசிய பேரிடர் மீட்புப் படையினர், ராணுவம் மற்றும் பிற நாட்டு அதிகாரிகள் மேற்கொண்டு வரும் மீட்புப் பணிகளால் இதுவரை 13,000-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.