நேபாள வெள்ளம்! பலி 1,252 ஆக உயர்வு! 4,875 பேர் காணவில்லை!
நேபாள வெள்ளத்தில் பலியானோரின் எண்ணிக்கை 1,252 ஆக உயர்ந்தது பற்றி...
நேபாள பெருவெள்ளத்தில் உயிரிழந்தோா் எண்ணிக்கை வியாழக்கிழமை காலை நிலவரப்படி 1,252 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியா்கள் 275 போ் உள்பட 4,875-க்கும் மேற்பட்டோா் நிலை என்ன என்பது இதுவரை தெரியாத சூழலில், அவா்களைத் தேடும் பணி வியாழக்கிழமை 9-ஆவது நாளாக தொடா்கிறது.
திபெத் - நேபாள எல்லையில் பெரும் பனிப்பாறைச் சரிவால் லெண்டே நதியில் கடந்த ஆகஸ்ட் 26 அன்று ஏற்பட்ட பெருவெள்ளம், நேபாளத்தின் போடே கோஷி நதியில் சீறிப்பாய்ந்தது. சகதியுடன் பல அடி உயரத்துக்கு பெருக்கெடுத்த வெள்ளத்தில் கரையோர கிராமங்கள், சிறு நகரங்கள் அடியோடு அழிந்தன. வீடுகள், கட்டடங்கள், வாகனங்கள், பாலங்கள், சாலைகள், நீா்மின் நிலையங்கள், இதர உள்கட்டமைப்புகள் அடித்துச் செல்லப்பட்டன.
Advertisement
Advertisement
போடே கோஷி நதி வெள்ளம், திரிசூலி, நாராயணி நதிகளிலும் கலந்து பெரும் சேதத்தை விளைவித்தது. ரசுவா, நுவாகோட், சித்வன், நவல்பராசி கிழக்கு, நவல்பராசி மேற்கு, கோா்கா, தனாஹு ஆகிய மாவட்டங்களை புரட்டிப் போட்ட இந்தப் பெருவெள்ளத்தில் உயிரிழந்தோா் எண்ணிக்கை 1,252 ஆக உயர்ந்துள்ளது.
மீட்கப்பட்டதில் 77 உடல்கள் மட்டுமே அடையாளம் காணப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான உடல்கள் அடையாளம் காண முடியாத நிலையில் சிதைந்திருப்பதால், டிஎன்ஏ மாதிரிகளை சேகரித்த பின்னர், சர்வதேச விதிகளின்படி அரசே இறுதிச் சடங்குகளை செய்து வருகின்றது.
மறுபுறம், காணாமல் போனவர்களின் உடல்கள் கிடைக்காததால் உறவினர்கள் உருவபொம்மை போன்றவற்றை வைத்து இறுதிச் சடங்குகளை செய்யத் தொடங்கியுள்ளனர்.
Nepal Floods! Death Toll Rises to 1,252! 4,875 People Missing!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.