FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

நேபாள வெள்ளம்: பலி எண்ணிக்கை 1,355 ஆக உயர்வு; 5,000 பேரைக் காணவில்லை

நேபாள பெருவெள்ளத்தில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை பற்றி...

7 செப்டம்பர் 2026, 2:35 pm IST
நேபாள வெள்ளம்
பகிர்:

நேபாள பெருவெள்ளத்தில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 1,355 ஆக உயர்ந்துள்ளது.

நேபாள-திபெத் எல்லைக்கு அருகில் ஆகஸ்ட் 26ஆம் தேதி ஏற்பட்ட பனிப்பாறை-பாறைச் சரிவு காரணமாக உருவான திடீர் வெள்ளம், வடக்கு மற்றும் மத்திய நேபாளத்தில் உள்ள நகரங்களையும் கிராமங்களையும் பேரழிவிற்குள்ளாக்கியது. இமயமலை எல்லைப் பகுதியிலிருந்து தெற்கு நோக்கிப் பாயும் போட்டிகோஷி நதி, வெள்ள நீரை அடித்துச் சென்று, வீடுகள், வாகனங்கள், சாலைகள் மற்றும் பாலங்களை அடித்துச் சென்றதுடன் நீர்மின் திட்டங்களையும் சேதப்படுத்தியது.

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து மேலும் உடல்கள் மீட்கப்பட்டதை அடுத்து, நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 1,355 ஆக உயர்ந்ததாக அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனர். 589 வெளிநாட்டினர் உட்பட காணாமல் போன 4,996 பேரைத் தேடும் பணியில் மீட்புக் குழுவினர் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர். அதே நேரத்தில் இதுவரை 13,396 பேர் மீட்கப்பட்டுள்ளதாக தேசிய பேரிடர் ஆபத்து குறைப்பு மற்றும் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

சித்வான் மாவட்டத்தில் 363, மேற்கு நவல்ப்ரசியில் 221, கிழக்கு நவல்ப்ரசியில் 222, நுவாகோட்டில் 197 உடல்களும் மீட்கப்பட்டுள்ளன. மேலும் ராசுவாவில் 169, கோர்க்காவில் 75, தாதிங்கில் 70, தனஹுவில் 38 உடல்களும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள நீர்மின் திட்டப் பகுதிகளில் தீவிர மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன. அங்கு நூற்றுக்கணக்கானோர் சுரங்கப்பாதைகளில் சிக்கியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

இந்தியா மற்றும் சீனாவைச் சேர்ந்த நிபுணர் குழுக்கள் நேபாள நாட்டு நிபுணர்களுக்கு இந்தப் பணிகளில் உதவி வருகின்றன.

summary

The death toll from the devastating flash floods in Nepal surged to 1,355 on Monday as more bodies were recovered from the affected areas, authorities said.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments