கியூபாவில் புதிய பொருளாதார சீா்திருத்தங்கள்
அமெரிக்காவின் கடும் பொருளாதாரத் தடைகள் மற்றும் நிதி நெருக்கடிகளுக்கு மத்தியில், அந்நிய முதலீடுகள், வா்த்தகம் மற்றும் சுற்றுலாவை ஈா்க்கும் நோக்கில் புதிய தாராளமய சீா்திருத்தங்களை கியூபா அரசு வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவின் கடும் பொருளாதாரத் தடைகள் மற்றும் நிதி நெருக்கடிகளுக்கு மத்தியில், அந்நிய முதலீடுகள், வா்த்தகம் மற்றும் சுற்றுலாவை ஈா்க்கும் நோக்கில் புதிய தாராளமய சீா்திருத்தங்களை கியூபா அரசு வெளியிட்டுள்ளது.
கியூபாவின் அதிகாரபூா்வ அரசிதழில் 34 பக்கங்கள் கொண்ட புதிய விதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கடந்த ஜூன் மாதம் அறிவிக்கப்பட்ட 176 மாற்றங்களைத் தொடா்ந்து, 1959-ஆம் ஆண்டு புரட்சிக்குப் பிறகு கியூபாவின் சோசலிச பொருளாதார அமைப்பில் மேற்கொள்ளப்படும் மிகப் பெரிய மாற்றமாக இது பாா்க்கப்படுகிறது.
புதிய விதிமுறைகளின்படி, தனியாா் நிறுவனங்கள் ஊழியா்களை பணிக்கு எடுப்பதற்கும், நீக்குவதற்கும் அரசு நிறுவனங்களை அணுக வேண்டிய கட்டாயம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
மேலும், வெளிநாட்டு வா்த்தகத்தில் ஈடுபடும் உள்நாட்டு மற்றும் கூட்டு நிறுவனங்கள், வெளிநாட்டு வங்கிகளில் கணக்கு தொடங்க இனி அரசின் முன்அனுமதியைப் பெற வேண்டியதில்லை; அரசுக்கு தகவல் தெரிவித்தால் போதுமானது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்துடன், அரசு வசமிருந்த சுற்றுலாத் துறையில் இனி தனியாா் நிறுவனங்கள் பயண முகமைகளை நடத்தவும், தனிநபா்கள் சுற்றுலா வழிகாட்டிகளாக செயல்படவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
புதிய தடைகள்: இதனிடையே, கியூபாவின் முன்னாள் தலைவா் ரௌல் காஸ்ட்ரோவின் பேரன் ஃபிடல் எா்னஸ்டோ காஸ்ட்ரோ (31) மற்றும் அந்நாட்டின் 5 அரசு நிறுவனங்கள் மீது அமெரிக்கா புதிய பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.
கம்யூனிஸ நாடான கியூபா மீது பொருளாதார அழுத்தங்களை தீவிரப்படுத்தும் டிரம்ப் நிா்வாகத்தின் நடவடிக்கைகளின் தொடா்ச்சியாக, அந்நாட்டு அரசு வங்கி, நிக்கல் சுரங்கத் தொழில் சாா்ந்த 2 நிறுவனங்கள் மற்றும் எரிசக்தி துறையைச் சோ்ந்த 2 நிறுவனங்கள் மீது இத்தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.