FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ரஷியா- உக்ரைன் போர் நிறுத்த அமைதிப் பேச்சுவார்த்தை: டிரம்ப் தூதர்கள் 2 நாடுகளுக்கும் பயணம்

ரஷியா- உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான அமைதி ஒப்பந்தத்தை முன்னெடுப்பது தொடர்பாக...

5 செப்டம்பர் 2026, 2:12 pm IST
அமைதி ஒப்பந்தத்தை முன்னெடுக்கும் வகையில் ரஷியா, உக்ரைன் பயணம் மேற்கொள்ளும் அமெரிக்க தூதர்கள். - கோப்புப்படம்
பகிர்:

கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வரும் ரஷியா- உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான அமைதி ஒப்பந்தத்தை முன்னெடுக்கும் வகையில் அமெரிக்க சிறப்பு தூதர்கள் ரஷியா- உக்ரைன் பயணம் மேற்கொள்கின்றனர்.

நேட்டோ அமைப்பில் உறுப்பினராக இணைய உக்ரைன் முயன்றது. இது மேற்கு நாடுகளுடன் இணைந்து ரஷியாவை அச்சுறுத்தும் முயற்சி என்ற குற்றச்சாட்டுடன் உக்ரைன் மீது ரஷியா போா் அறிவித்தது. கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக போர் நடந்து வருகிறது. கரோனா பெருந்தொற்றிலிருந்தே மீளாத உலகப் பொருளாதாரத்துக்கு ரஷியா-உக்ரைன் போா் மற்றொரு இடியாக விளங்கியது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் ஆயுதத் துணையோடு போரிடும் உக்ரைன், அசுர பலத்துடன் உள்ள ரஷியாவின் தாக்குதலுக்கு தற்போது வரை ஈடுகொடுத்து வருகிறது.

இதனிடையே, ரஷிய அதிபா் புதின் மற்றும் உக்ரைன் அதிபா் ஸெலென்ஸ்கி ஆகிய இருவருடன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அமைதி ஒப்பந்தத்தை முன்னெடுக்கும் நோக்கில், தனது சிறப்புப் பிரதிநிதி ஸ்டீவ் விட்காஃப் மற்றும் மருமகன் ஜாரெட் குஷ்னர் ஆகியோர் ரஷியா மற்றும் உக்ரைனுக்குப் பயணம் செய்வார்கள் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் டிரம்ப் பேசியதாவது:

மீண்டும் அமைதிப் பேச்சுவார்த்தைகள் மூலம் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான சாத்தியக் கூறுகளை ரஷிய அதிபர் புதின் மற்றும் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி ஆகியோருக்கு இடையே ராஜதந்திர ரீதியில் முன்னேற்றத்தை ஏற்படுத்த முடியுமா என்பதை தூதர்கள் மதிப்பீடு செய்வார்கள் என்று கூறினார்.

அமைதிக்கான ஒரு யோசனையைத் தனது நிர்வாகம் முன்வைக்கும் என்று கூறிய டிரம்ப், கடுமையான ராணுவ இழப்புகள் காரணமாக ஒரு தீர்வு காண்பது அவசரத் தேவை என்றும் வலியுறுத்தினார்.

மேலும், ரஷியாவையும் உக்ரைனையும் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு கொண்டுவந்து மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அமெரிக்காவின் பரந்த முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்தப் பயணங்கள் அமையும் என்று கூறினார்.

இதையடுத்து அமெரிக்க சிறப்பு தூதர்களான ஜாரெட் குஷ்னர் மற்றும் ஸ்டீவ் விட்காஃப் ஆகியோர் மாஸ்கோ மற்றும் கீவ் நகரங்களுக்கு சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நேரில் சென்று அமைதிப் பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளனர்.

இதுதொடர்பாக ஜெலென்ஸ்கி சமூக ஊடகப் பதிவு ஒன்றில், அமெரிக்க அதிபர் டிரம்பின் சிறப்புத் தூதர்கள் குழு முதலில் மாஸ்கோவிற்கும் பின்னர் கீவ் நகருக்கும் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையடுத்து அமெரிக்க தூதர்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யும் வகையில் வருகை மற்றும் அமைதிப் பேச்சுவார்த்தை முடியும் வரை தங்கள் தரப்பில் இருந்து எந்தவொரு வான்வழித் தாக்குதலும் நடத்தப்படாது என்றும், ரஷியாவும் இதையே பின்பற்ற வேண்டும் என்று ரஷியாவிடம் கேட்டுக்கொண்டுள்ளதாக ஜெலென்ஸ்கி கூறினார்.

தூதர்களின் வருகைக்கான அனைத்து ஏற்பாடுகளையும் உக்ரைன் தீவிரமாக செய்து வருகிறது.

summary

US special envoys headed to Russia and Ukraine to relaunch mediation

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments