ஹோர்முஸ் நீரிணை பகுதிகளில் அமெரிக்க-ஈரான் மோதல்; பதற்றம் அதிகரிப்பு
ஹோர்முஸ் நீரிணை பகுதிகளில் அமெரிக்க-ஈரான் மோதல்கள் குறித்து...
ஹோர்முஸ் நீரிணையை சுற்றியுள்ள கடல்பகுதிகளில் கப்பல்கள் மீது அமெரிக்கா மற்றும் ஈரான் படைகள் மாறி மாறி நடத்தப்பட்ட தாக்குதல்களால் அமெரிக்க-ஈரானுக்கு இடையேயான மோதல் போரை தீவிரப்படுத்தியுள்ளது.
ஹோர்முஸ் நீரிணைக்கு உள்ளேயும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் கப்பல்கள் மீது இரு தரப்பினரின் தாக்குதல்களால் அமெரிக்க-ஈரானுக்கு இடையேயான போர் பதற்றம் அதிகரித்துள்ளது.
சனிக்கிழமை ஈரானின் மூன்று எண்ணெய் கப்பல்கள் மீது அமெரிக்கப் படைகள் தாக்குதல் நடத்தியதாக அமெரிக்கா கூறியது. அதேபோன்று, ஹோர்முஸ் நீரிணையின் பாதுகாக்கப்பட்ட பகுதிக்குள் அனுமதியின்றி நுழைய முயன்ற, தொலைவிலிருந்து இயக்கப்படும் ஒரு அமெரிக்கப் படகு மீது ஈரான் கடற்படை தாக்குதல் நடத்தியதாக ஈரான் கூறியது.
Advertisement
Advertisement
ஹோர்முஸ் நீரிணை வழியாகப் பயணித்த, அமெரிக்காவுடன் தொடர்புடைய எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியதாக ஈரான் கூறியுள்ளது.
சனிக்கிழமை மூன்று ஈரானிய எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்படடதாக அமெரிக்க தெரிவித்ததை அடுத்து ஈரானின் பதிலடி தாக்குதல் நிகழ்ந்துள்ளது.
ஒரு மாத கால அமைதிக்குப் பிறகு, இந்த வாரத் தொடக்கத்தில் அமெரிக்காவும் ஈரானும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டபோது ஏற்பட்ட ஒரு குறிப்பிடத்தக்க மோதலைத் தொடர்ந்து இந்த மோதல் நிகழ்ந்துள்ளது. ராஜதந்திரத் தீர்வுக்கான தெளிவான அறிகுறிகள் காணப்படாத நிலையில், இந்த தாக்குதல்கள் எண்ணெய் விலைகளை அதலபாதாளத்திற்கு கொண்டு செல்லும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இதனிடையே, ஈரானின் மூன்று எண்ணெய் கப்பல்கள் மீது அமெரிக்கப் படைகள் நடத்திய தாக்குதல் "போர்க்குற்றம்" என ஈரான் வெளியுவுற அமைச்சக்கம் கண்டித்துள்ளது.
ஹோர்முஸ் நீரிணைப் பகுதிகளில் அமெரிக்காவின் முற்றுகை மற்றும் தாக்குதல்கள் தொடர்ந்தால் பதிலடித் தாக்குதல்கள் தீவிரப்படுத்தப்படும் என ஈரான் ஆயுதப்படைகள் எச்சரித்துள்ளன.
இந்த நிலையில், ஈரானின் நதான்ஸ் அணுசக்தி மையத்திற்கு அருகே அமைந்துள்ள பிக்அக்ஸ் நிலத்தடி அணுசக்தி வளாகத்தின் மீது மிக விரைவில் தாக்குதல் நடத்தக்கூடும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் எச்சரித்துள்ளார்.
The US-Iran conflict has seen a fresh escalation around the Strait of Hormuz this week
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.