ஐக்கிய அரபு அமீரகம் உடனான உறவைத் துண்டித்த அல்ஜீரியா!
ஐக்கிய அரபு அமீரகம் உடனான அனைத்து உறவுகளையும் துண்டிப்பதாக அல்ஜீரியா அரசு அறிவித்துள்ளது...
முன்னணி வளைகுடா நாடான ஐக்கிய அரபு அமீரகம் உடனான அனைத்து உறவுகளையும் அல்ஜீரியா அரசு துண்டித்துள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் தூண்டுதல் மற்றும் விரோதப் போக்குடைய செயல்களாலும், வருந்தத்தக்க நியாயமற்ற நடத்தைகளாலும் அந்நாட்டுடனான அனைத்து உறவுகளையும் துண்டித்துகொள்வதாகக் குறிப்பிட்டு அல்ஜீரியா வெளியுறவு அமைச்சகம் இன்று (செப். 10) அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இந்த முடிவுக்கான எந்தவொரு தனிப்பட்ட அல்லது குறிப்பிட்ட காரணமும் அல்ஜீரியா தரப்பில் இருந்து தெரிவிக்கப்படவில்லை. இதுகுறித்து, அமீரகத்தின் தூதர் நேரில் அழைக்கப்பட்டு அவரிடம் தெரிவிக்கப்பட்டதாகவும், நடவடிக்கைகளுக்கு உடன்பட 48 மணிநேரம் கால அவகாசம் வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
Advertisement
Advertisement
கடந்த 2020 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களின் அடிப்படையில், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் மொராக்கோ ஆகிய நாடுகள் இஸ்ரேல் உடன் உறவுகளை மேம்படுத்தி வருகின்றன. இதனால், அல்ஜீரியா மற்றும் அமீரகம் இடையேயான உறவுகளில் விரிசல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இத்துடன், மேற்கு சஹாரா விவகாரத்திலும் அல்ஜீரியா மற்றும் அமீரகம் இடையே முரண்பாடு நிலவி வருகிறது. மேற்கு சஹாராவை சுதந்திர நாடாக அங்கீகரிக்க அல்ஜீரியா ஆதரவு தெரிவித்து வருகிறது. ஆனால், மேற்கு சஹாராவை மொராக்கோவின் ஒரு பகுதியாக அமீரக அரசு அங்கீகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
The Algeria has announced that it is severing all ties with the United Arab Emirates, a leading Gulf nation.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.