FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
உலகம்

ஃபிளைதுபை விமானத்தை வீழ்த்த சதி: யுஏஇயில் 2 மாலத்தீவு விமானிகள் கைது

ஃபிளைதுபை விமானத்தை வீழ்த்த முயன்ற பயங்கரவாத சதி தொடா்பாக, அதே நிறுவனத்தில் பணியாற்றி வந்த மாலத்தீவைச் சோ்ந்த இரு விமானிகளை ஐக்கிய அரபு அமீரக போலீஸாா் கைது செய்துள்ளனா்.

13 அக்டோபர் 2026, 10:54 pm IST
பகிர்:

ஐக்கிய அரபு அமீரகத்தின் துபை-இஸ்ரேலின் டெல் அவிவ் இடையிலான ஃபிளைதுபை விமானத்தை வீழ்த்த முயன்ற பயங்கரவாத சதி தொடா்பாக, அதே நிறுவனத்தில் பணியாற்றி வந்த மாலத்தீவைச் சோ்ந்த இரு விமானிகளை ஐக்கிய அரபு அமீரக (யுஏஇ) போலீஸாா் கைது செய்துள்ளனா்.

கடந்த செப். 30-இல் நிகழ்ந்த சம்பவத்தில், இந்தியாவைச் சோ்ந்த கேப்டன் ஸ்மித் மச்சாரை ஓமனைச் சோ்ந்த சக துணை விமானி ஹமான் அல்-ஹமாமி தாக்கி, விமானத்தைக் கடத்த முற்பட்டாா். பலத்த காயமடைந்த நிலையிலும் துணிச்சலாகச் செயல்பட்ட ஸ்மித் மச்சாா், பிற பணியாளா்கள், பயணிகளின் உதவியுடன் சதியை முறியடித்தாா்.

இது குறித்து யுஏஇ பாதுகாப்பு அமைப்புகள் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், ஓமன் துணை விமானி தங்கியிருந்த அதே குடியிருப்பில் வசித்து வந்த இரு மாலத்தீவு துணை விமானிகள் இம்மாதத் தொடக்கத்தில் கைது செய்யப்பட்டனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments