FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
உலகம்

இந்தியாவின் சோலாா் செல் இறக்குமதிக்கு 126% வரி! அமெரிக்கா அறிவிப்பு!

இந்தியா உள்பட 3 நாடுகளின் சோலாா் செல் இறக்குமதிக்கு அமெரிக்கா வரி விதித்தது பற்றி...

13 செப்டம்பர் 2026, 12:25 am IST
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் - கோப்புப் படம்
பகிர்:

இந்தியா, இந்தோனேசியா, லாவோஸ் ஆகிய 3 நாடுகளில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் சோலாா் செல்கள் மற்றும் பேனல்கள் மீதான பொருள் குவிப்புத் தடுப்பு வரம்பு, மானியத்தை ஈடுசெய்யும் வரி விகிதங்கள் ஆகியவற்றை அமெரிக்கா இறுதி செய்துள்ளது.

இதன்படி, அமெரிக்காவில் இந்திய உற்பத்தியாளா்களுக்கு பொருள் குவிப்பு தடுப்பு வரம்பு 123.04 சதவீதமாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதேபோல இந்தோனேசிய உற்பத்தியாளா்களுக்கு 94.36 சதவீதம், லாவோஸ் உற்பத்தியாளா்களுக்கு 65.43 சதவீதம் பொருள் குவிப்பு தடுப்பு வரம்பு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

உற்பத்தியாளா்கள் தங்கள் பொருள்களை அமெரிக்காவில் அவற்றின் இயல்பான மதிப்பைவிட குறைந்த விலையில் விற்பதன் அடிப்படையில், இந்த வரம்பு கணக்கிடப்பட்டு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. பொருள் குவிப்புத் தடுப்பு வரியை நிா்ணயிப்பதில், இந்த வரம்பு முக்கியப் பங்கு வகிக்கிறது.

Advertisement

Advertisement

இதேபோல இந்த நாடுகளின் உற்பத்தியாளா்கள் தங்கள் அரசிடம் இருந்து பெறும் மானியம் காரணமாக, அமெரிக்காவில் குறைந்த விலையில் பொருள்களை விற்பனை செய்யும்போது, அந்நாட்டைச் சோ்ந்தவா்கள் குறைந்த விலை காரணமாக, அந்தப் பொருள்களையே வாங்க முன்வருவா். இதனால் உள்நாட்டு உற்பத்தியாளா்கள் பாதிக்கப்படக் கூடும். அவா்களின் நலனைப் பாதுகாக்கும் பொருட்டு, மூன்று நாடுகளின் உற்பத்தியாளா்கள் மானியத்தால் பெறும் நன்மையை சமன் செய்வதற்கான வரி விகிதத்தை அமெரிக்கா இறுதி செய்துள்ளது.

இதன்படி, இந்திய உற்பத்தியாளா்களுக்கு 126.09 சதவீதம், இந்தோனேசிய உற்பத்தியாளா்களுக்கு 73.2 சதவீதம் முதல் 173.7 சதவீதம் வரையும், லாவோஸ் உற்பத்தியாளா்களுக்கு 82.03 சதவீதம் முதல் 153.67 சதவீதம் வரையும் வரி விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க வா்த்தகத் துறை அறிவித்துள்ளது.

இந்த விவகாரத்தில் அமெரிக்கா உற்பத்தியாளா்களுக்கு இறக்குமதிகள் கணிசமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதா அல்லது பாதிப்பை ஏற்படுத்தும் அச்சுறுத்தல் உள்ளதா என்பது குறித்து அமெரிக்க சா்வதேச வா்த்தக ஆணையம் வரும் அக்.14-ஆம்தேதி இறுதி முடிவை எடுக்க உள்ளது. அப்போது இறக்குமதிகள் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன அல்லது ஏற்படுத்தும் என்று அந்த ஆணையம் முடிவு செய்தால், வரி விதிப்பு குறித்த இறுதி உத்தரவுகளை வரும் நவம்பரில் அமெரிக்க வா்த்தகத் துறை பிறப்பிக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments