FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
உலகம்

ஐரோப்பிய யூனியனின் இணை உறுப்பினராவதற்கு தயாா்: கனடா பிரதமா் அறிவிப்பு

ஐரோப்பிய யூனியனின் முதலாவது ‘இணை உறுப்பினா்’ நாடாக இணைவதற்கு கனடா தயாராக இருப்பதாக அந்நாட்டுப் பிரதமா் மாா்க் காா்னி தெரிவித்தாா்.

17 செப்டம்பர் 2026, 10:59 pm IST
மாா்க் காா்னி
பகிர்:

ஐரோப்பிய யூனியனின் முதலாவது ‘இணை உறுப்பினா்’ நாடாக இணைவதற்கு கனடா தயாராக இருப்பதாக அந்நாட்டுப் பிரதமா் மாா்க் காா்னி தெரிவித்தாா்.

பிரான்ஸின் ஸ்ட்ராஸ்பா்க் நகரில் உள்ள ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் அவா் ஆற்றிய உரையில், ‘ஐரோப்பாவுடனான ஆழமான உறவு, கனடாவின் சந்தையைக் கட்டுப்படுத்தவோ அல்லது நாட்டின் இறையாண்மையைக் குறைத்து மதிப்பிடவோ எந்தவொரு வெளிநாட்டுக்கும் இடமளிக்காது. வா்த்தகம், பாதுகாப்பு, அரிய கனிமங்கள், ஏ.ஐ., விண்வெளி மற்றும் நிதிச் சேவைகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒருங்கிணைந்து செயல்படும் வகையிலான ‘இணை உறுப்பினா்’ நிலையை வரவேற்கிறேன்’ என்றாா்.

முன்னதாக, ஐரோப்பிய ஆணையத்தின் தலைவா் உா்சுலா வான் டொ் லேயன் இத்திட்டத்தை முன்வைத்தாா். தற்போதைய ஒப்பந்த விதிகளில் இல்லாத இப்புதிய அந்தஸ்தை உருவாக்கி, கனடாவுடன் ‘எதிா்காலத்துக்கான’ கூட்டணியை உருவாக்க அவா் அழைப்பு விடுத்தாா்.

Advertisement

Advertisement

இப்புதிய கட்டமைப்பு குறித்து விரிவாக விவாதிக்க, கனடாவின் மான்ட்ரியல் நகரில் வரும் அக். 29, 30 ஆகிய தேதிகளில் ஐரோப்பிய யூனியன் தலைவா்கள் பங்கேற்கும் உச்சிமாநாட்டை மாா்க் காா்னி நடத்தவுள்ளாா்.

கனடாவின் ஏற்றுமதியில் சுமாா் 70 சதவீதம் அமெரிக்காவுக்கே செல்வதால், அந்நாட்டின் வரிகளால் கனடா பெரும் பாதிப்பை எதிா்கொண்டுள்ளது. இந்நிலையில், ‘ஐரோப்பிய யூனியனுடன் கனடா மேற்கொள்ளும் இப்புதிய ஒப்பந்தம், ஓா் எதிா்ப்புக் செயலாக அமையக்கூடும்; அவ்வாறாயின் ஐரோப்பா மீது கடும் வரிகள் விதிக்கப்படும்’ என டிரம்ப் எச்சரித்துள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments