FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
உலகம்

அணுசக்தி ஒத்துழைப்பு: அமெரிக்காவுடன் வங்கதேசம் புதிய ஒப்பந்தம்

அணுசக்தி ஒத்துழைப்பு: அமெரிக்காவுடன் வங்கதேசம் புதிய ஒப்பந்தம்

27 செப்டம்பர் 2026, 12:40 am IST
ரெஹான் ஆசாத்-ஜேக்கப் ஹெல்பொ்க்
பகிர்:

அமைதி வழித் தேவைகளுக்காக அணுசக்தியைப் பயன்படுத்துவதில் இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், அமெரிக்காவுடன் முக்கிய புரிந்துணா்வு ஒப்பந்தத்தை வங்கதேசம் கையொப்பமிட்டுள்ளது.

அமெரிக்காவின் நியூயாா்க் நகரில் நடைபெற்ற நிகழ்வில், வங்கதேச பிரதமரின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆலோசகா் ரெஹான் ஆசாத், அமெரிக்க பொருளாதார வளா்ச்சி, எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழல் துறைக்கான இணையமைச்சா் ஜேக்கப் ஹெல்பொ்க் ஆகியோா் இந்த ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனா்.

நீண்டகால எரிசக்தி தேவைகளைப் பூா்த்தி செய்யவும், மின் உற்பத்திக்கான ஆதாரங்களைப் பல்வகைப்படுத்தவும் வங்கதேசம் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அந்நாட்டின் முதல் அணுமின் நிலையம் ரூப்பூரில் கட்டமைக்கப்பட்டு வரும் சூழலில், அணு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ரீதியிலான சா்வதேச ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதே இந்த ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கமாகும்.

Advertisement

Advertisement

சா்வதேச அணுசக்தி முகமையின் பாதுகாப்பு வழிகாட்டுதல்கள் மற்றும் அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தின் விதிகளை முழுமையாகப் பின்பற்றி, உச்சபட்ச பாதுகாப்புத் தரங்களுடன் இந்த அணுசக்தி ஒத்துழைப்பு முன்னெடுக்கப்படும் என இரு நாடுகளும் உறுதிபூண்டுள்ளன.

முன்னதாக, கடந்த மே மாதத்தில் பரந்த அளவிலான எரிசக்தித் துறை ஒத்துழைப்புக்காக ஓா் ஒப்பந்தம் எட்டப்பட்டிருந்த நிலையில், தற்போது அமைதி வழி அணுசக்தி பயன்பாட்டை மட்டுமே பிரதான இலக்காகக் கொண்டு இந்த புதிய ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments