
சிறப்புச் செய்திகள்
பரவும் கரோனா: லைவ் அப்டேட்ஸ்
கரோனா நோய்த்தொற்று தொடர்பான செய்திகள் உலகம் முதல் உள்ளூர் வரை - உடனுக்குடன்

கரோனா நோய்த்தொற்று தொடர்பான செய்திகள் உலகம் முதல் உள்ளூர் வரை - உடனுக்குடன்.. லைவ் அப்டேட்ஸ்!
உலக அளவில் கரோனா பலி 2 லட்சத்தை நெருங்குகிறது
அமெரிக்காவில் கரோனா பலி எண்ணிக்கை 50 ஆயிரத்தை தாண்டியது
ராயபுரத்தில் கரோனா பாதிப்பு 100யைத் தாண்டியது; சென்னையில் மண்டலவாரியாக விவரம்
சென்னையில் மண்டலவாரியாக கரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கையை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
கரோனாவை கண்காணிக்க மட்டுமே விரைவு பரிசோதனைக் கருவிகள்
கரோனாவை கண்காணிக்க மட்டுமே விரைவு பரிசோதனைக் கருவிகளை பயன்படுத்த வேண்டும் என்று இந்திய மருத்துவக் கவுன்சில் மாநிலங்களுக்கு அறிவுறுத்தலை வழங்கியுள்ளது. விரிவான செய்திக்கு..
தொழிலதிபர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை
தமிழகத்தில் உள்ள தொழிலதிபர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.விரிவான செய்திக்கு..
கரோனா: பிரிட்டனில் பலி எண்ணிக்கை 19 ஆயிரத்தை நெருங்குகிறது
கரோனா வைரஸ் நோய்த் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டோர் மற்றும் பலியானோர் பற்றிய சமீபத்திய அறிவிப்பை அந்த நாட்டின் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதன்படி, 24 மணி நேரத்தில் புதிதாக 4,583 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து பிரிட்டனில் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 1,38,078 ஆக உயர்ந்துள்ளது.
கரோனாவால் உலகில் பஞ்சம் ஏற்படும் அபாயம்
தமிழகத்தில் 1,629 பேருக்கு கரோனா பாதிப்பு
தமிழகத்தில் மேலும் 33 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம், மாநிலத்தில் கரோனா நோய்த்தொற்றுக்கு ஆளானோரின் எண்ணிக்கை 1,629-ஆக அதிகரித்துள்ளது. விரிவான செய்திக்கு...
சிங்கப்பூா்: மேலும் 1,1016 பேருக்கு தொற்று
பாகிஸ்தான்: இம்ரானுக்கு கரோனா சோதனை
பாகிஸ்தான் பிரதமா் இம்ரான் கானுக்கு புதன்கிழமை கரோனா நோய்த்தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. அவரை சில நாள்களுக்கு முன்னா் சந்தித்த ஏதி அறக்கட்டளையைச் சோ்ந்த ஃபைஸல் ஏதிக்கு அந்த நோய்த்தொற்று ஏற்பட்டது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது.விரிவான செய்திக்கு...
1.8 லட்சத்தை நெருங்கும் கரோனா பலி
கரோனா நோய்த்தொற்று பாதிப்பால் உலகம் முழுவதும் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை புதன்கிழமை 1.8 லட்சத்தை நெருங்கியது என கரோனா நோய்த்தொற்று பாதிப்பு விவகாரங்களை உடனுக்குடன் வெளியிடும் அமெரிக்க நூலக சங்கத்தின் ‘வோ்ல்டோமீட்டா்’ வலைதள புள்ளிவிவரங்கள் தெரிவிக்கிறது. விரிவான செய்திக்கு...
மும்பை தாராவியில் மேலும் 25 பேருக்கு கரோனா தொற்று: ஒருவர் பலி
மும்பை தாராவி குடிசைப்பகுதியில் இன்று மட்டும் 25 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்துடன் சேர்த்து தாராவியில் கரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை 214ஆக உயர்ந்துள்ளது. மேலும் அங்கு இன்று ஒருவர் பலியானதை சேர்ந்து பலியானோர் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. இதனிடையே புனேயில் கரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த 41 வயதுடையவர் இன்று பலியானார்.
ஸ்பெயினில் 24 மணி நேரத்தில் 440 பேர் பலி
ஸ்பெயினில் கடந்த 24 மணி நேரத்தில் 440 பேர் பலியாகியிருப்பதாக அந்த நாட்டின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் பலியானோரின் எண்ணிக்கை 22,157 ஆக உயர்ந்துள்ளது. கரோனாவுக்கு கடந்த 24 மணிநேரத்தில் 4,635 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இத்துடன் அங்கு கரோனாவல் பாதித்தோர் எண்ணிக்கை 2,13,024ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் ஒரேநாளில் 27 பேருக்கு கரோனா; மாவட்டவாரியாக நிலவரம்
தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக சென்னையில் ஒரேநாளில் 27 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
போபாலில் 34 காவலர்களுக்கும்; 30 குடும்ப உறுப்பினர்களுக்கும் கரோனா பாதிப்பு
மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் உயர் அதிகாரிகள் உட்பட 34 காவல்துறையினருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
கேரளத்தில் இன்று புதிதாக 10 பேருக்கு கரோனா பாதிப்பு: பினராயி விஜயன்
திருவனந்தபுரம்: கேரளத்தில் இன்று புதிதாக 10 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதால், மாநிலத்தில் கரோனா தொற்று பாதித்து சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 129 ஆக உயர்ந்திருப்பதாக கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். விரிவான செய்திக்கு..
தமிழகத்தில் புதிதாக 54 பேருக்கு கரோனா; பாதிப்பு 1,683 ஆக அதிகரித்தது!
தமிழகத்தில் புதிதாக 54 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை தகவல் வெளியிட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
இந்தியாவில் கரோனா பாதிப்பு 21,700; பலி 686 ஆக உயர்வு: சுகாதாரத் துறை
இந்தியாவில் கரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை 21,700 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
மொபைல் ரீசார்ஜ், மின்விசிறி, புத்தகக் கடைகள் இயங்கலாம்
மொபைல் ரீசார்ஜ் கடைகள், மின்விசிறி பழுதுபார்ப்பு கடைகள் இயங்க மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.விரிவான செய்திக்கு..
கடந்த 14 நாள்களில் 78 மாவட்டங்களில் யாருக்கும் கரோனா பாதிப்பு இல்லை: மத்திய சுகாதாரத் துறை
கடந்த 24 மணி நேரத்தில், புதிதாக 1,409 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
ஹரியாணாவில் ஊடகவியலாளர்களுக்கு ரூ.10 லட்சம் காப்பீடு: முதல்வர் அறிவிப்பு
கரோனா வைரஸ் தொற்று பரவி வரும் இக்காலத்தில் பணியில் ஈடுபடும் பத்திரிகையாளர்களுக்கு தலா ரூ.10 லட்சம் காப்பீடு வழங்க மாநில அரசு முடிவு செய்துள்ளதாக ஹரியாணா முதல்வர் மனோகர் லால் கட்டர் தெரிவித்துள்ளார். விரிவான செய்திக்கு..
தமிழகத்தில் 100 நாள் வேலைத்திட்டத்துக்கு அனுமதி: அரசாணை வெளியீடு
தமிழகத்தில் 100 நாள் வேலைத்திட்டம் உள்ளிட்ட சில பணிகளுக்கு அனுமதி அளித்து அரசாணை வெளியிப்படப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
ஆந்திரத்தில் புதிதாக 80 பேருக்கு கரோனா தொற்று; 24 மணி நேரத்தில் 3 பேர் பலி
வடகிழக்கு மாநிலங்களில் கரோனாவின் தற்போதைய நிலை
உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கபசுர குடிநீர் அருந்தலாம்: தமிழக அரசு
பொதுமக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக்கொள்ள கபசுர குடிநீர், நிலவேம்பு கசாயம் குடிக்கலாம் என தமிழக அரசு கூறியுள்ளது. விரிவான செய்திக்கு..
பாகிஸ்தானில் கரோனா பாதிப்பு 10,513; பலி 224 ஆக உயர்ந்தது!
பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 742 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதியாகியுள்ளது. விரிவான செய்திக்கு..
கர்நாடகத்தில் கரோனா பாதிப்பு 500யை நெருங்குகிறது!
கர்நாடகத்தில் புதிதாக 16 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து மாநிலத்தில் பாதிப்பு எண்ணிக்கை 443 ஆக உயர்ந்துள்ளது. விரிவான செய்திக்கு..
கரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட 2-வது மாநிலமானது குஜராத்
கரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் வரிசையில் மகாராஷ்டிரத்தைத் தொடர்ந்து இரண்டாவது மாநிலமாக குஜராத் முந்தியுள்ளது. விரிவான செய்திக்கு..
கரோனா தொற்று செல்லிடப்பேசிகள் வழியாகவும் பரவும்
மருத்துவமனைக்கு பணிக்கு வரும் மருத்துவப் பணியாளர்கள் அனைவரும், வளாகத்துக்குள் நுழையும் முன்பே செல்லிடப்பேசிகளைக் கொடுத்துவிட்டு பணிக்குச் செல்ல வேண்டும் என்று மேற்கு வங்க முதன்மைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார். விரிவான செய்திக்கு..
ஒவ்வொரு இந்தியக் குடும்பத்துக்கும் ரூ.7,500 இழப்பீடு: சோனியா வலியுறுத்தல்
கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருக்கும் நிலையில், பாஜக அரசுக்கு சொன்ன யோசனைகள் எதுவும் ஏற்கப்படவில்லை என்று காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா குற்றம்சாட்டியுள்ளார். விரிவான செய்திக்கு..
அத்தியாவசியப் பொருட்கள் பெற ஏப்ரல 24, 25-ல் டோக்கன்
சென்னை: தமிழகத்தில் அத்தியாவசியப் பொருட்களை பெற, ஏப்ரல் 24, 25ம் தேதிகளில் வீடு தேடி வந்து டோக்கன் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
சென்னையில் அம்பத்தூருக்கும் பரவியது கரோனா தொற்று: ஒருவருக்கு பாதிப்பு
சென்னை: சென்னையில் இதுவரை கரோனா தொற்று இல்லாமல் இருந்த அம்பத்தூர் மண்டலத்திலும் ஒருவருக்கு கரோனா தொற்று பரவியுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. விரிவான செய்திக்கு..
அடையாள போராட்டத்தை கைவிடுங்கள்: அமித் ஷா கோரிக்கை
புது தில்லி: அடையாளப் போராட்டத்தைக் கைவிடுங்கள், மத்திய அரசு உங்களுடன் இருக்கிறது என்று மருத்துவர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கோரிக்கை வைத்துள்ளார். விரிவான செய்திக்கு..
ராஜீவ்காந்தி மருத்துவமனை மருத்துவா்களுடன் முதல்வா் இன்று ஆலோசனை
சென்னையில் உள்ள ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை மருத்துவா்கள், செவிலியா்களுடன் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி புதன்கிழமை ஆலோசனை நடத்துகிறாா்.
ஊரடங்கை உடனடியாக நீக்குவது ஆபத்து
கரோனா நோய்த்தொற்றை (கொவைட்-19) கட்டுப்படுத்துவதற்காக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கை, உலக நாடுகளின் அரசுகள் அவசரகதியில் விலக்கினால் அந்த நோய்த்தொற்று பரவல் அபாயகரமான அளவுக்கு அதிகரிக்கும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. விரிவான செய்திக்கு..
கேரளத்தில் புதிதாக 11 பேருக்கு கரோனா தொற்று உறுதி
கேரளத்தில் புதிதாக 11 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்த மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். விரிவான செய்திக்கு..
சென்னையில் இன்று 15 பேருக்கு கரோனா உறுதி: மாவட்டவாரியாக நிலவரம்
தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக சென்னையில் ஒரேநாளில் 15 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் புதிதாக 33 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. விரிவான செய்திக்கு..
வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன் உயிருடன் இருக்கிறாரா, இல்லையா?
தீவிர பொதுவுடைமை நாடான வட கொரியாவின் அதி உயர் தலைவரான கிம் ஜோங் உன் நலமாக இருக்கிறாரா, இல்லையா? உயிருடன்தான் இருக்கிறாரா? வழக்கம் போல இந்தக் கேள்விகள் எதற்கும் விடை தெரியவில்லை. விரிவான செய்திக்கு..
தமிழகத்தில் மேலும் 33 பேருக்கு கரோனா; பாதிப்பு 1,629 ஆக உயர்வு
தமிழகத்தில் புதிதாக 33 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. விரிவான செய்திக்கு..
இந்தியாவில் கரோனா பாதிப்பு 20 ஆயிரத்தைத் தாண்டியது!
இந்தியாவில் கரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை 20,471 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
கரோனா பரிசோதனை: தனிமைப்படுத்திக் கொண்ட இம்ரான் கான்!
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை சந்தித்தவருக்கு கரோனா உறுதியானதை அடுத்து, இம்ரான் கானுக்கு இன்று கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
பெங்களூருவில் தாய்க்கும் சேய்க்கும் வாழ்வளித்த பல் மருத்துவர்
பெங்களூரு: மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே குழந்தை பெற்றெடுத்த பெண்ணுக்கு சிகிச்சை அளித்து தாயையும், சேயையும் காப்பாற்றியுள்ளார் பெங்களூருவைச் சேர்ந்த பல் மருத்துவர். விரிவான செய்திக்கு..
மும்பையில் கரோனா நோயாளிகளுக்கான படுக்கை வசதிகளை அதிகரிக்குமாறு மத்திய அரசு அறிவுரை
மகாராஷ்டிர மாநிலத்தில் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், படுக்கை வசதிகளை அதிகரிக்குமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. விரிவான செய்திக்கு..
அஸ்ஸாமில் கடந்த 7 நாள்களாக யாருக்கும் தொற்று இல்லை
அஸ்ஸாமில் கடந்த 7 நாள்களாக யாருக்கும் தொற்று இல்லை என அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தகவல் தெரிவித்துள்ளார். விரிவான செய்திக்கு..
கரோனா தடுப்புப் பணிக்கு ரூ.15,000 கோடி ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்
கரோனா தடுப்புப் பணிக்கு ரூ.15,000 கோடி ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. விரிவான செய்திக்கு..
பிரிட்டனில் விரைவில் முகக் கவசம் கட்டாயமாகிறது
பிரிட்டனில் பொதுவெளியிலும் ரயில், பேருந்துப் போக்குவரத்து சேவைகளைப் பயன்படுத்தும்போதும் மக்கள் முகக் கவசம் அணியுமாறு அரசு அறிவுறுத்தவிருக்கிறது. விரிவான செய்திக்கு..
மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களை தாக்கினால் 7 ஆண்டுகள் வரை சிறை: மத்திய அரசு
மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்களை தாக்கினால் 6 மாதங்கள் முதல் 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கும் அவசர சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. விரிவான செய்திக்கு..
மின் கட்டணம்: தாழ்வழுத்த தொழிற்சாலை மற்றும் வணிக மின் நுகர்வோர் கவனத்திற்கு..
ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருக்கும் நிலையில், தமிழகத்தில் தாழ்வழுத்த தொழிற்சாலை மற்றும் வணிக மின்நுகர்வோர்கள் மின் கட்டணம் செலுத்துவது தொடர்பாக தமிழக மின் வாரியம் ஒரு விளக்கத்தை அளித்துள்ளது. விரிவான செய்திக்கு..
கரோனா தடுப்பு நடவடிக்கைகள்: தமிழக அரசுக்கு வெங்கய்ய நாயுடு பாராட்டு
தமிழகத்தில் கரோனா தொற்று பரவாமல் தடுக்க மாநில அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு இந்திய குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு பாராட்டு தெரிவித்துள்ளார்.
கரோனா தடுப்புப் பணிக்கு நடிகர் விஜய் ரூ.1.30 கோடி நிதியுதவி வழங்கியுள்ளார். விரிவான செய்திக்கு..
கரோனா பணியாளர்கள் உயிரிழக்க நேரிட்டால் ரூ.50 லட்சம்: முதல்வர் அறிவிப்பு
கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்டோர் உயிரிழக்க நேரிட்டால் அவர்களுக்கு ரூ. 50 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். விரிவான செய்திக்கு..
உயிரிழந்த மருத்துவரின் குடும்பத்தினருக்கு முதல்வர் பழனிசாமி ஆறுதல்
சென்னையில் கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது உயிரிழந்த தனியார் மருத்துவமனையின் தலைமை மருத்துவர் சைமனின் குடும்பத்தினருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொலைபேசியில் ஆறுதல் தெரிவித்தார். விரிவான செய்திக்கு..
ஊடகவியலாளர்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்: மத்திய அரசு அறிவுறுத்தல்
ஊடகவியலாளர்கள் பணியில் ஈடுபடும் போது தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. விரிவான செய்திக்கு..
சென்னை மருத்துவர்களின் போராட்ட அறிவிப்பு வாபஸ்
சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் தங்களது போராட்ட அறிவிப்பிபை வாபஸ் பெற்றுள்ளனர். விரிவான செய்திக்கு..
தில்லியில் மேலும் 75 பேருக்கு கரோனா உறுதி: அமைச்சர் தகவல்
தில்லியில் இன்று புதிதாக 75 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தில்லி சுகாதாரத் துறை அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார். விரிவான செய்திக்கு..
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அமெரிக்காவிலிருந்து வெளியேறும் இந்தியர்கள்! ஏன்?

ஆம்புலன்ஸில் சென்று வாக்களித்த உடல்நிலை சரியில்லாத முதியவா்

கரூரில் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெல்வேன்: எம்.ஆா். விஜயபாஸ்கா்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

