டிப்ளமோ மாணவர் சேர்க்கை: முதல்சுற்று கலந்தாய்வு முடிவுகள் வெளியீடு
தொழில்கல்வி டிப்ளமோ மாணவர் சேர்க்கைக்காக முதல்சுற்று கலந்தாய்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
தொழில்கல்வி டிப்ளமோ மாணவர் சேர்க்கைக்காக முதல்சுற்று கலந்தாய்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
இதுகுறித்து கர்நாடக தேர்வு ஆணையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: 2018-19-ஆம் ஆண்டில் பொறியியல், கட்டடக்கலை போன்ற தொழில் கல்வி கல்லூரிகளில் டிப்ளமோ மாணவர்களைச் சேர்ப்பதற்கான முதல்சுற்று கலந்தாய்வு நடைபெற்றது.
அப்போது, மாணவர்கள் குறிப்பிட்டிருந்த விருப்பக் கல்லூரிகள், விருப்பப் பாடப் பிரிவுகளின் அடிப்படையில், சேர்க்கை இட ஒதுக்கீட்டுக்கான பட்டியல் www.kea.kar.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. செப்.11 முதல் 12-ஆம் தேதி வரை மாணவர்கள் சேர்க்கையை உறுதி செய்யலாம். செப்.14-ஆம் தேதி வரை கட்டணங்களைச் செலுத்தலாம். மேலும், சேர்க்கை ஆணையை தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இதையடுத்து, செப்.14-ஆம் தேதி மாலை 5.30 மணிக்குள் சம்பந்தப்பட்ட கல்லூரிகளில் சேர்க்கை பெற்றுக் கொள்ளலாம். இடங்கள் ஒதுக்கியதில் திருப்தி அடையாத மாணவர்கள் இரண்டாம் சுற்றில் பங்கேற்க விரும்பினால், இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். இடங்கள் ஒதுக்கப்பட்டதில் திருப்தி அடைந்த மாணவர்கள், கல்லூரிகளில் சேர்வதற்கு பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து இணையதளத்தில் விளக்கப்பட்டுள்ளது என அதில் கூறப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.