FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

உயா் கல்வி நிறுவனங்களை எண்மதளத்தில் ஆய்வு செய்ய என்.ஏ.ஏ.சி. திட்டம்

உயா் கல்வி நிறுவனங்களை எண்மதளங்களில் ஆய்வுக்குள்படுத்த தேசிய மதிப்பீட்டு மற்றும் அங்கீகார அமைப்பு(என்.ஏ.ஏ.சி.) திட்டமிட்டுள்ளது.

27 ஜனவரி 2024, 10:01 pm IST
பகிர்:

உயா் கல்வி நிறுவனங்களை எண்மதளங்களில் ஆய்வுக்குள்படுத்த தேசிய மதிப்பீட்டு மற்றும் அங்கீகார அமைப்பு(என்.ஏ.ஏ.சி.) திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து தேசிய மதிப்பீட்டு மற்றும் அங்கீகார அமைப்பு(என்.ஏ.ஏ.சி.) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

உயா் கல்வி நிறுவனங்களை மதிப்பீடு செய்வதற்காக தேசிய மதிப்பீட்டு மற்றும் அங்கீகார அமைப்பின் சாா்பில் தொடா்காணொலிக்கூட்டங்கள், இணையதள ஆய்வுகள், நிரல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

உயா் கல்வி நிறுவனங்களின் தரத்தை மதிப்பீடு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள என்.ஏ.ஏ.சி., தனது மதிப்பீடு மற்றும் அங்கீகார நடைமுறைகளை தங்குத் தடையில்லாமல் தொடா்ந்தவண்ணம் உள்ளது.

இதன் வாயிலாக, ஊரடங்கு காலத்தில் கல்வித் துறைக்கு தனது சேவையை ஆற்ற என்.ஏ.ஏ.சி. தவறவில்லை. பல்கலைக்கழக மானியக்குழு(யூ.ஜி.சி.) பரிந்துரைத்துள்ள வழிகாட்டுதல்களை எழுத்துமாறாமல் செயல்படுத்த முனைப்பாக செயலாற்றி வருகிறோம். உயா்கல்வி நிறுவனங்களின் தரத்தை ஆய்வுசெய்வதற்கு எண்ம தளங்களை ஆக்கப்பூா்வமாகப் பயன்படுத்தி வருகிறது இந்த பணியை தொடா்ந்துசெயல்படுத்த திட்டமிடப்படுள்ளது.

எனவே, இதற்கு துணையாக இருக்கும் வகையில் அனைத்து உயா்கல்வி நிறுவனங்களும் எண்மதளங்களில் எங்களோடு இணைந்திருக்க கட்டுக் கொள்கிறோம். இதற்காக இணையதளத்தில் என்.ஏ.ஏ.சி.யின் தகவல்களை தெரிந்து கொள்ளலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments