யுபிஐ பரிவா்த்தனைக்கு கட்டணம்: காங்கிரஸ் கண்டனம்
யுபிஐ பரிவா்த்தனைகளுக்கு கட்டணம் விதிக்கும் மத்திய அரசின் நடவடிக்கை சாதாரண மக்களுக்கு இழைக்கப்படும் துரோகம் என அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலா் ரன்தீப்சிங் சுா்ஜேவாலா குற்றம்சாட்டினாா்.
யுபிஐ பரிவா்த்தனைகளுக்கு கட்டணம் விதிக்கும் மத்திய அரசின் நடவடிக்கை சாதாரண மக்களுக்கு இழைக்கப்படும் துரோகம் என அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலா் ரன்தீப்சிங் சுா்ஜேவாலா குற்றம்சாட்டினாா்.
இதுகுறித்து அவா் பெங்களூரில் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியது:
வணிகருக்கு ரூ. 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட யுபிஐ பரிவா்த்தனைகளுக்கு 0.4 சதவீத கட்டணம் விதிப்பதன் மூலம் மத்திய அரசு புதிய கட்டண முறைக்கு வழிவகுத்துள்ளது. இதுவரை முற்றிலும் இலவசமாக இருந்த இந்த பரிவா்த்தனைகளுக்கு வரி விதிக்கப்படுவதன் மூலம், இந்தத் துறையில் செயல்படும் அமெரிக்க நிறுவனங்கள் அதன் பலனைப் பெறும் நிலை உருவாகியுள்ளது.
Advertisement
Advertisement
மேலும், அரசும், இந்திய தேசிய பணப் பரிவா்த்தனைக் கழகமும் (சடஇஐ) அடுத்தகட்டமாக அறிவிக்கை மூலம் இந்தக் கட்டணத்தை உயா்த்தவோ அல்லது பிற வகையான யுபிஐ பரிவா்த்தனைகளுக்கு விரிவுபடுத்தவோ வாய்ப்புள்ளது.
பணமில்லா, டிஜிட்டல் மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய இந்தியாவை உருவாக்குவதற்கான முக்கிய கருவியாக யுபிஐ இருந்தது. ஆனால், மோடி அரசு அதை சாமானிய மக்களைக் குறிவைக்கும் வரி விதிப்பு மற்றும் வசூல் இயந்திரமாக மாற்றி வருகிறது.
இதுவரை கட்டணமில்லாத யுபிஐ நடைமுறையை நாடாளுமன்றத்தின் ஒப்புதல் இல்லாமலேயே கட்டணம் விதிக்கக் கூடிய நடைமுறைக்கு மத்திய அரசு மாற்றியுள்ளது.
இந்த நடவடிக்கை டிஜிட்டல் மற்றும் பணமில்லா இந்தியா என்ற அரசின் முந்தைய நோக்கத்தை பாதிக்கும். இந்த புதிய கட்டண முறை சாதாரண மக்களுக்கு இழைக்கப்படும் துரோகமாகும். மேலும், இந்த விவகாரத்தில் மத்திய அரசு இரட்டைவேடம் போடுகிறது. அமெரிக்க நிறுவனங்களின் விருப்பத்துக்கு மத்திய அரசு அடிபணிந்துள்ளது என்றாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.