திருவெண்ணெய்நல்லூரில் 3 நாள் மின்தடை
உளுந்தூர்பேட்டை, அக்.8: விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் துணை மின் நிலையத்தில் திங்கள்கிழமை (10-ம் தேதி) மாதந்திர பராமரிப்பு பணி நடைபெற இருப்பதாலும், 11 மற்றும் 12-ம் தேதி புதிய 16 எம்.வி.ஏ. த
உளுந்தூர்பேட்டை, அக்.8: விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் துணை மின் நிலையத்தில் திங்கள்கிழமை (10-ம் தேதி) மாதந்திர பராமரிப்பு பணி நடைபெற இருப்பதாலும், 11 மற்றும் 12-ம் தேதி புதிய 16 எம்.வி.ஏ. திறன் மின்மாற்றி அமைக்கப்பட இருப்பதாலும் இந்த நாள்களில் திருவெண்ணெய்நல்லூர் துணை மின் நிலைய கட்டுப்பாட்டில் உள்ள பெரியசெவலை, பரிக்கல், வேலூர், பெரும்பாக்கம், ஆமூர், பாவந்தூர், பையூர், டி. எடையார், அமாவாசைபாளையம், மேலமங்கலம், கிராமம், செங்கல்வராயன் சர்க்கரை ஆலைப்பகுதி, திருவெண்ணெய்நல்லூர், ஏனாதிமங்கலம், ஏமப்பூர், எரளூர் உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.
மேலும் இந்த துணை மின் நிலையத்தில் உள்ள
10 எம்.வி.ஏ. திறன் கொண்ட மின்மாற்றியை அகற்றி
Advertisement
Advertisement
விட்டு 16 எம்.வி.ஏ. திறன் கொண்ட மின்மாற்றி
அமைக்கப்பட உள்ளதால் 11 மற்றும் 12 ஆகிய இரு தினங்களுக்கு சீரான மின் விநியோகம் வழங்க இயலாத நிலை உள்ளது.
வீடுகள் மற்றும் குடிநீர்த் தேவைக்காக சுழற்சி முறையில் மின்சாரம் வழங்கப்படும் என்றும், இதற்கு மின் நுகர்வோர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறும் உளுந்தூர்பேட்டை உள்கோட்ட செயற்பொறியாளர் எல்.எஸ். பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.