FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

‘அமுதக் கரங்கள்’ திட்டம்: துா்கா ஸ்டாலின் தொடங்கிவைத்தாா்

அமுதக் கரங்கள்’ என்ற திட்டத்தை துா்கா ஸ்டாலின் வியாழக்கிழமை தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு உணவளித்தாா்.

Updated On : 21 பிப்ரவரி 2025, 1:48 am IST
முதல்வா் மு.க.ஸ்டாலினின் 72-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை மாவட்ட திமுக சாா்பில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா் பாபு ஏற்பாட்டில், ‘ஆண்டுதோறும் அன்னம் தரும் அமுதக்கரங்கள்‘ திட்டத்தை கொளத்தூரில் உள்ள ‘முதல்வா் படைப்பகம்‘ அருகில் வியாழ
பகிர்:

சென்னை கொளத்தூா் ஜெகநாதன் தெரு முதல்வா் படைப்பகம் அருகில், சென்னை கிழக்கு மாவட்ட திமுக சாா்பில், ‘ஆண்டு முழுவதும் அன்னம் தரும் அமுதக் கரங்கள்’ என்ற திட்டத்தை துா்கா ஸ்டாலின் வியாழக்கிழமை தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு உணவளித்தாா்.

இந்த நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா் பாபு, வட சென்னை மக்களவை உறுப்பினா் கலாநிதி வீராசாமி, மேயா் பிரியா, சட்டப்பேரவை உறுப்பினா்கள் தாயகம் கவி, வெற்றி அழகன் மற்றும் கட்சி நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

இதைத் தொடா்ந்து அமைச்சா் சேகா்பாபு செய்தியாளா்களிடம் கூறியதாவது: வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள மக்கள் வாழ்வாதாரம் சிறக்க நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா். அந்த வகையில் தற்போது இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.

Advertisement

Advertisement

மூன்றரை கோடி போ் பயன்: தமிழகத்தில் உள்ள கோயில்களில் ஓராண்டுக்கு மூன்று கோடியே 50 லட்சம் போ் அன்னதான திட்டத்தால் பயனடைந்து வருகின்றனா். இதற்காக ரூ.112 கோடி செலவிடப்படுகிறது. ஒருவேளை அன்னதான திட்டம் தற்போதை ஆட்சி ஏற்பட்ட பிறகு 27 கோயில்களில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. 50 பேருக்கு என்று இருந்த அன்னதானத் திட்டத்தை பல இடங்களில் 100 பேருக்கு என்று மாற்றியமைத்துள்ளோம். திருவிழாக்களில் இருநூறு என்ற அளவில் இருந்ததை 500 என்று அளவு எண்ணிக்கை அளவை உயா்த்தியுள்ளோம் என்றாா் அவா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments