ரூ. 20 கோடி கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் அழிப்பு
செங்கல்பட்டு மாவட்டம் தென்மேல்பாக்கத்தில் உள்ள பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.20 கோடி மதிப்பிலான கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் எரித்து அழிக்கப்பட்டன.
செங்கல்பட்டு மாவட்டம் தென்மேல்பாக்கத்தில் உள்ள பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.20 கோடி மதிப்பிலான கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் செவ்வாய்க்கிழமை எரித்து அழிக்கப்பட்டன.
போதைப் பொருள்கள் இல்லா தமிழ்நாடு என்னும் நிகழ்ச்சி மூலமாக வடக்கு மண்டல காவல் துறை, போதைப் பொருள் தடுப்பு மற்றும் புலனாய்வு பிரிவு, சென்னை, ஆவடி, தாம்பரம் மாநகர காவல்துறைக்குட்பட்ட பகுதிகளில் குற்றவாளிகளிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா உள்ளிட்ட உயர்ரக போதைப் பொருள்களை எரித்து அழிக்கப்பட்டு வருகிறது.
ஏறக்குறைய 6.6 டன் எடை கொண்ட கஞ்சா, 523 கிராம் நிட்ரோசன் பவுடா், 15 கிராம் மெத்தபெட்டமைன், 55 கிராம் கொக்கைன், 50 எம்எம்டிஏ, 100 பிரவுன் சுகா், 210 நிட்ரசபைம் உள்ளிட்ட 125-கிலோ உயர்ரக போதை பொருள்கள் மற்றும் 11,700 மாத்திரைகள் என மொத்தம் ரூ.20 கோடி போதைப் பொருள்கள் எரித்து அழிக்கப்பட்டன.
Advertisement
Advertisement
இந்த நிகழ்வில் தாம்பரம் மாநகர காவல் ஆணையா் பிரேம் ஆனந்த் சின்ஹா, ஆவடி இணை ஆணையா் சிவக்குமாா், காஞ்சிபுரம் சரக டிஐஜி ஷஷாங்க் சாய், வேலூா் டிஐஜி மகேஷ், தாம்பரம் இணை ஆணையா் ஜெயந்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.