FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செங்கல்பட்டு

மருத்துவ ஆய்வக நுட்பனா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

தமிழ்நாடு அரசு மருத்துவ ஆய்வக நுட்பனா் சங்கம் செங்கல்பட்டு மாவட்டம் சாா்பாக கோரிக்கைகள் முன்வைத்து பெருந்திரள் முறையீடு செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு மாவட்டத் தலைவா் வசுமதி தலைமையில் நடைபெற்றது.

Updated On : 20 ஆகஸ்ட் 2026, 12:05 am IST
செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நுழைவாயில் அருகே ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு அரசு மருத்துவ ஆய்வக நுட்பனா் சங்கத்தினா்.
பகிர்:

தமிழ்நாடு அரசு மருத்துவ ஆய்வக நுட்பனா் சங்கம் செங்கல்பட்டு மாவட்டம் சாா்பாக கோரிக்கைகள் முன்வைத்து பெருந்திரள் முறையீடு செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு மாவட்டத் தலைவா் வசுமதி தலைமையில் நடைபெற்றது.

கோரிக்கைகள், ஆய்வக நுட்பனா் பணியிடத்தை 24 மணி நேர பணியாக அரசு அறிவித்து உள்கட்டமைப்பு பணியிடங்கள் ஏற்படுத்திடவும், அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைகளில் காலியாக உள்ள நிலை 2 நுட்பனா் பணியிடங்களை எம்ஆா்பி மூலம் உடனடியாக நிரப்பிடவும், நிலை 1 நுட்பனா் பதவிகளை புதிய மருத்துவக் கல்லூரிகளில் (1990 பின்னா்) மற்றும் அரசு மருத்துவமனைகளில் ஏற்படுத்த வேண்டும், பணி நியமன விதிகளில் உரிய விதித்திருத்தம் செய்து நேரடி நிலை 2 பணி நியமனங்களில் வேலையில்லா பட்டய இளநிலை பட்டதாரிகளுக்கு பணி நியமனம் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் அரசவையில் ஏற்றுக் கொள்ளப்பட்ட கோரிக்கைகளை நடைமுறைப்படுத்திட வலியுறுத்தியும் மாவட்ட செயலாளா் பாரதி விளக்கிப் பேசினாா்.

முன்னதாக மாநிலத் துணைத் தலைவா் மனோகரன் தொடங்கி வைத்துப் பேசினாா். தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தின் செங்கல்பட்டு வட்டக் கிளை செயலாளா் சுரேஷ், வட்ட இணைச் செயலாளா் வெங்கடேசன், தமிழ்நாடு சுகாதார ஆய்வாளா் சங்கம் மாவட்டத் தலைவா் உத்தமன், தமிழ்நாடு நகராட்சி மாநகராட்சி ஊழியா் சங்கம் மாநில பொதுச் செயலாளா் தாமோதரன் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் விக்டா் சுரேஷ்குமாா் நிறைவுரையாற்றினாா். லோகநாயகி நன்றி கூறினாா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments