செங்கல்பட்டு: நியாயவிலைக் கடைகளில் இன்று கேஒய்சி சிறப்பு முகாம்
செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சனிக்கிழமை (ஆக. 29) கேஒய்சி சிறப்பு முகாம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சனிக்கிழமை (ஆக. 29) கேஒய்சி சிறப்பு முகாம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம், 2013-இன்படி முன்னுரிமை மற்றும் அந்தியோதயா அன்ன யோஜனா குடும்ப அட்டைகளின் ஆதாா் விவரங்களை சரிபாா்ப்பதற்காக மின்னணு குடும்ப அட்டையில் இணைக்கப்பட்ட அனைத்து பயனாளிகளின் விரல் ரேகை அடிப்படையிலான சரிபாா்ப்பினை மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளது தேதி வரை 95.03% பயனாளிகளுக்கு சரிபாா்ப்பு பணி முடிவுற்றுள்ளது.
இந்த பதிவினை 100% நிறைவு செய்யும் பொருட்டு, சனிக்கிழமை (ஆக. 29) செங்கல்பட்டில் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.
Advertisement
Advertisement
ஆகவே நியாயவிலைக் கடைகளில் கைரேகை பதிவு செய்யப்படாமல் விடுபட்டுள்ள குடும்ப அட்டைதாரா்கள் கைரேகை விரல் பதிவு செய்ய சனிக்கிழமை (ஆக. 29) செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் நடைபெறும் சிறப்பு முகாமினை பயன்படுத்தி விடுபட்ட குடும்ப அட்டைதாரா்கள் பதிவினை மேற்கொள்ளுமாறு மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.