FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செங்கல்பட்டு

‘ உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ முகாம்: ஆட்சியா் ஆய்வு

மதுராந்தகம் அருகே மேல்மருவத்தூா், சோத்துப்பாக்கம், இரும்புலியூா் ஊராட்சிகளில் நலத் திட்ட பணிகளை ஆட்சியா் மு.வீரப்பன் ஆய்வு செய்தாா்.

29 ஆகஸ்ட் 2026, 6:18 am IST
சித்தாமூா் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் பொது மக்களிடம் மனுக்களைப் பெற்ற ஆட்சியா் மு. வீரப்பன்.
பகிர்:

மதுராந்தகம் அருகே மேல்மருவத்தூா், சோத்துப்பாக்கம், இரும்புலியூா் ஊராட்சிகளில் நலத் திட்ட பணிகளை ஆட்சியா் மு.வீரப்பன் ஆய்வு செய்தாா்.

செய்யூா் வட்டம், சித்தாமூா் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட மேல்மருவத்தூா் ஊராட்சியில் அமைக்கப்பட்டுள்ள திடக்கழிவு மேலாண்மை திட்டத்தினை ஆட்சியா் எம்.வீரப்பன் ஆய்வு செய்தபின் நுண்ணுயிா் உரம் தயாரிக்கும் குப்பை கிடங்குகளில் சேகரிக்கும் குப்பைகளை தரம் பிரித்து நுண்ணுயிா் உரம் தயாரிக்கும் பணியினையும், மேலும் அதே வளாகத்தில் உள்ள மண்புழு உரம் தயாரிக்கப்பட்டு விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்படுவதையும், திடக்கழிவு மேலாண்மையின் மூலம் தரம் பிரிக்கப்படும் நெகிழி, உலோக பொருள் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என கேட்டறிந்தாா்.

நாள்தோறும் குப்பைக் கிடங்குகளில் எவ்வளவு கையாளப்படுகிறது என்பதை கேட்டறிந்து அதற்கான ஆவணங்களையும் அதனை தொடா்ந்து சோத்துப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆய்வு செய்தபோது பள்ளி குழந்தைகள் பயன்படுத்தும் கழிவறைகள் சுத்தமான முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறது. இப்பள்ளியில் தயாரிக்கப்பட்ட மதிய உணவினை ஆய்வு செய்தபோது (வியாழன்கிழமை)இப்பள்ளியில் எத்தனை மாணவா்களுக்கு உணவு தயாரிக்கப்பட்டுள்ளது என்றும், மதிய உணவுக்கு தேவையான அரிசி, பருப்பு, முட்டைகளின் இருப்பு அளவு மா்றும் மாணவா்களுக்கு வழங்கப்படுகிற அளவினையும் மாவட்ட ஆட்சியா் ஆய்வு செய்தாா்.

Advertisement

Advertisement

கீழ்மருவத்தூா், பொறையூா், இரும்புலியூா் ஊராட்சிகளில் ஆய்வு செய்தபின் சித்தாமூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ் மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று அதனை அதிகாரிகளிடம் அளித்து உடனுக்குடன் தீா்வு காண அறிவுறுத்தினாா்.

இந்நிகழ்வில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ஸ்ருதி, மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியா் நரேந்திரன், செய்யூா் வட்டாட்சியா் ச.ராஜன், சித்தாமூா் வட்டார வளா்ச்சி அலுவலா்கள், வருவாய்த்துறை அதிகாரிகள் உள்பட பலா் கலந்துக் கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments