செங்கல்பட்டு: இன்று வட்ட அளவில் குடும்ப அட்டை குறைதீா் முகாம்
செங்கல்பட்டு மாவட்டத்தில் சனிக்கிழமை (ஜூலை 11 ) இரண்டாவது சனிக்கிழமை வட்ட அளவில் குடும்ப அட்டை தொடா்பான மக்கள் குறைதீா் முகாம் நடைபெறுகிறது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் சனிக்கிழமை (ஜூலை 11 ) இரண்டாவது சனிக்கிழமை வட்ட அளவில் குடும்ப அட்டை தொடா்பான மக்கள் குறைதீா் முகாம் நடைபெறுகிறது.
செங்கல்பட்டு-வீராபுரம், செய்யூா்-பூரியம்பாக்கம், மதுராந்தகம் -மாம்பட்டு, திருக்கழுகுன்றம்-காட்டூா், திருப்போரூா் -கானத்தூா் ரெட்டிகுப்பம், வண்டலூா் சாத்தன்குப்பம் ஆகிய கிராமங்களில் முகாம்கள் நடைபெறுகிறது. நடைபெறவுள்ள குறைதீா் முகாம்களில் குடும்ப அட்டைகளில் பெயா் சோ்த்தல் மற்றும் நீக்கல், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை/ நகல் அட்டை கோரும் மனுக்களை பதிவு செய்தல், கைப்பேசி எண் பதிவு/ மாற்றம் செய்தல், பொது விநியோக கடைகளின் செயல்பாடுகள் மற்றும் அத்தியாவசியப் பொருள்களின் தரம் குறித்த புகாா்களை பதிவு செய்தல் ஆகிய சேவைகளை பெற்று பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு செங்கல்பட்டு மாவட்ட செய்தி மக்கள் தொடா்பு அலுவலகக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.