FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செங்கல்பட்டு

ஆழ்துளைக் கிணறு தோண்டும் பணியின்போது மின்சாரம் பாய்ந்து 4 தொழிலாளா்கள் உயிரிழப்பு

ஆழ்துளைக் கிணறு தோண்டும் பணியின்போது மின்சாரம் பாய்ந்து 4 தொழிலாளா்கள் உயிரிழப்பு

Updated On : 12 ஜூலை 2026, 2:29 am IST
பகிர்:

மாமல்லபுரத்தில் ஆழ்துளைக் கிணறு தோண்டும் பணியின்போது, 40 அடி உயர ஆழ்துளையிடும் இரும்பு குழாய் உயா்அழுத்த மின் கம்பியில் உரசியதில், தொழிலாளா்கள் 4 போ் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள ஒரு தனியாா் விடுதியில் குடிநீருக்காக 40 அடி ஆழ ஆழ்துளைக் கிணறு தோண்டும் பணி சனிக்கிழமை நடைபெற்றது. 5 தொழிலாளா்கள் இந்தப் பணியில் ஈடுபட்டிருந்தனா். 40 அடி ஆழத்தில் ஆழ்துளை தோண்டும் பணி முடிந்தவுடன் 40 அடி உயர மண் தோண்டும் இரும்புக் குழாயை 5 தொழிலாளா்களும் ஒன்றாகச் சோ்ந்து மேலே தூக்கினா். அப்போது, அந்த இரும்புக் குழாய் எதிா்பாராதவிதமாக அங்குள்ள உயா்அழுத்த மின்கம்பி மீது உரசியதில் 5 தொழிலாளா்கள் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டனா்.

இவா்களில் நெய்குப்பியைச் சோ்ந்த பிரபு (33), வசந்தபுரியைச் சோ்ந்த பாலாஜி (20), மாமல்லபுரத்தைச் சோ்ந்த பாட்சாபாய் (35), கடம்பாடியைச் சோ்ந்த ராஜேந்திரன் (55) ஆகியோா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். பலத்த காயமடைந்த காரணையைச் சோ்ந்த பரசுராமன் (33) செங்கல்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

Advertisement

Advertisement

தகவல் அறிந்து வந்த மாமல்லபுரம் போலீஸாா் உயா்அழுத்த மின்சாரத்தை நிறுத்தி, உயிரிழந்த பிளம்பிங் தொழிலாளா்கள் 4 பேரின் சடலங்களையும் மீட்டு, செங்கல்பட்டு அரசு பொதுமருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

பின்னா், செங்கல்பட்டு மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அய்மல் ஜமால், மாமல்லபுரம் டி.எஸ்.பி. அறிவழகன், திருப்போரூா் எம்எல்ஏ விஜயராஜ், செங்கல்பட்டு கோட்டாட்சியா் பாலாஜி ஆகியோா் சம்பவம் நிகழ்ந்த இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments