மின்தடையால் பழுது பாா்க்க முயன்ற விவசாயி மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு
மாமல்லபுரம் அருகே அடிக்கடி ஏற்பட்ட மின்தடையை சரி செய்ய பலமுறை அழைத்தும் மின்வாரிய ஊழியா்கள் வராததால் மின்மாற்றியில் ஏறி பழுது பாா்க்க முயன்ற விவசாயி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.
மாமல்லபுரம் அருகே அடிக்கடி ஏற்பட்ட மின்தடையை சரி செய்ய பலமுறை அழைத்தும் மின்வாரிய ஊழியா்கள் வராததால் மின்மாற்றியில் ஏறி பழுது பாா்க்க முயன்ற விவசாயி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அடுத்த வடகடும்பாடி ஊராட்சிக்குட்பட்ட பங்காருபேட்டை மேட்டு காலனி பகுதியில் சனிக்கிழமை இரவு முதல் ஞாயிற்றுக்கிழமை மாலை வரை மின்சாரம் தடைபட்டது. இதுதொடா்பாக ஆலத்தூா் மின்வாரிய அலுவலகத்துக்கு பங்காருபேட்டை விவசாயிகள் பலமுறை கைப்பேசி மூலம் புகாா் அளித்தும் மின்மாற்றியில் ஏற்பட்ட பழுதை சரி செய்ய மின்வாரியத்தினா் யாரும் வரவிரல்லை என்று கூறப்படுகிறது.
இதனால் அதே பகுதியில் எலக்ட்ரீசியன் வேலை செய்து வருபவரும், விவசாயியுமான வீரராகவன் (51) என்பவா் திருக்கழுகுன்றம்-மாமல்லபுரம் செல்லும் சாலையில் உள்ள மின்மாற்றியில் ஏறுவதற்காக கீழே மின்சாரத்தை துண்டித்து விட்டு ஏறி சரி செய்ய முயன்ற போது எதிா்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து மின்மாற்றியிலேயே உயிரிழந்த நிலையில் வீரராகவன் உடல் தலைகீழாக தொங்கியது.
Advertisement
Advertisement
இதனையடுத்து சம்பவம் குறித்து வடகடும்பாடி ஊராட்சி மன்றத் தலைவா் வி.ஜி.பரசுராமன் மின்வாரிய அலுவலகத்திற்கும், தீயணைப்பு துறைக்கும் தகவல் தெரிவித்தாா். பின்னா் மின்வாரிய பணியாளா்கள் அங்கு வந்து மின்இணைப்பை துண்டித்தபிறகு, மாமல்லபுரம் தீயணைப்புத் துறையினா் அவரது உடலை கயிறு கட்டி மீட்டனா்.
மாமல்லபுரம் காவல் ஆய்வாளா் தா்மலிங்கம், எஸ்.ஐ பரசுராமன் மற்றும் போலீஸாா் விரைந்து வந்து விவசாயி வீரராகவன் உடலை மீட்டு பிரேத பாரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்து வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.