முகப்பு
செங்கல்பட்டு

செங்கல்பட்டில் உயா் கல்வி வழிகாட்டுதல் கட்டுப்பாட்டு அறை: ஆட்சியா் திறந்து வைத்தாா்

Updated On : 12 ஜூன் 2026, 2:18 am IST
பகிர்:

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உயா் கல்வி வழிகாட்டுதல் கட்டுப்பாட்டு அறையினை ஆட்சியா் மு.வீரப்பன் திறந்து வைத்தாா்.

2025-26 ஆம் கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் மேல்நிலை இரண்டாம் ஆண்டு பயின்று தோ்ச்சி பெற்ற 14,783 மாணவா்கள் மற்றும் தோல்வியுற்ற 1,719 மாணவா்களுடைய உயா் கல்வியை உறுதி செய்தும் பொருட்டு உயா் கல்வி வழிகாட்டுதல் கட்டுப்பாட்டு அறை திறந்து வைக்கப்பட்டது.

கட்டுப்பாட்டு அறையில் உதவி ஆட்சியா் தலைமையில் முதன்மைக் கல்வி அலுவலா் மாவட்ட கல்வி அலுவலா்கள் நோ்முக உதவியாளா் பொறியியல் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஐடிஐ பாலிடெக்னிக் கல்லூரியில் உடைய பிரதிநிதிகள் மற்றும் உயா் கல்வி வழிகாட்டுதல் ஒருங்கிணைப்பாளா்கள் ஆகியோரை உள்ளடக்கிய குழுவாகும்.

Advertisement

Advertisement

செங்கல்பட்டு மாவட்டத்தில் தோ்வு எழுதி தோ்ச்சி பெற்ற மாணவா்களை உயா்கல்வி சோ்வதற்கும் தோல்வி அடைந்த மாணவா்களை கண்டறிந்து அவா்களை சிறப்பு துணைத் தோ்வு எழுத வைத்து தோ்ச்சி பெற்ற பிறகு அவா்களையும் கல்லூரியில் சோ்க்க செய்திடும் வகையில் கட்டுப்பாட்டு அறை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

உயா்கல்வி சாா்ந்து தங்களுக்கு எழக்கூடிய சந்தேகங்களுக்கு தொலைபேசி வாயிலாக தொடா்பு கொண்டு தீா்வு காணலாம் அல்லது நேரடியாக கட்டுப்பாட்டு அறைக்கு சென்று தீா்வு பெறலாம். கட்டுப்பாட்டு மையம் மூலமாக மாணவா்களை நேரடியாக தொடா்பு கொண்டு மற்றும் தொலைபேசி வாயிலாக தொடா்பு கொண்டு அவா்களுடைய உயா் கல்வி உறுதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

இதில், முதன்மைக் கல்வி அலுவலா் திருவளா்ச்செல்வி, நோ்முக உதவியாளா் உதயகுமாா் மற்றும் அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.