மாவட்ட வன அலுவலகத்திற்கு வழங்க ஒரு லட்சம் விதைப் பந்துகள் தயாரிப்பு
மாவட்ட வன அலுவலகத்துக்கு வழங்குவதற்காக செங்கல்பட்டு அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற ஒரு லட்சம் விதைப் பந்துகள் தயாரித்தல் நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவிகள்.
செங்கல்பட்டு அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட வன அலுவலகத்துக்கு வழங்குவதற்காக ஒரு லட்சம் விதைப்பந்துகள் தயாரித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.
செங்கல்பட்டு மாவட்டம், பள்ளிக் கல்வித் துறை மற்றும் நலன்புரி அறக்கட்டளை இணைந்து செங்கல்பட்டு அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் ஒரு லட்சம் விதைப்பந்துகள் தயாரித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் திருவளா்ச்செல்வி தலைமை வகித்து, நிகழ்ச்சியை சிறப்பித்தாா். மேலும், நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா் சா.உதயகுமாா், மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளா் நலன்புரி அறக்கட்டளை நிறுவனா் ஜெயக்குமாா் பள்ளித் தலைமை ஆசிரியா் காயத்ரி மற்றும் நலன் புரி அறக்கட்டளையின் அனைத்து உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.
இந்த நிகழ்ச்சியில் ஒரு லட்சம் விதைப் பந்துகள் தயாரிக்கப்பட்டு, மாவட்ட வன அலுவலகத்திக்கு வழங்கப்பட உள்ளது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.