FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

செங்கல்வராயர் அறக்கட்டளையின் தலைவராக நீதிபதி எஸ்.ராஜேஸ்வரன் நியமனம்: உயர் நீதிமன்றம் உத்தரவு

செங்கல்வராயர் அறக்கட்டளையின் புதிய தலைவராக ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.ராஜேஸ்வரனை நியமித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

24 ஜனவரி 2024, 10:11 pm IST
பகிர்:

செங்கல்வராயர் அறக்கட்டளையின் புதிய தலைவராக ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.ராஜேஸ்வரனை நியமித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
 சென்னையில் உள்ள பி.டி.லீ. செங்கல்வராய நாயக்கர் அறக்கட்டளையின் தலைவராக இருந்த உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன், தனது தலைவர் பதவியை கடந்த ஜனவரி 12-ஆம் தேதி ராஜிநாமா செய்தார்.
 இதையடுத்து, அறக்கட்டளையின் தலைவரை நியமித்து உத்தரவிடக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுதாகர், எஸ்.வைத்தியநாதன் ஆகியோர், "செங்கல்வராயர் அறக்கட்டளைக்கு புதிய தலைவராக உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி எஸ்.ராஜேஸ்வரனை நியமிக்கிறோம். அறக்கட்டளையின் அனைத்து பொறுப்புகளையும் உடனடியாக அவரிடம் ஒப்படைக்க வேண்டும். நீதிபதி எஸ்.ராஜேஸ்வரன் இந்தப் பதவியில் வரும் 2017-ஆம் ஆண்டு செப்டம்பர் 19-ஆம் தேதி வரை நீடிப்பார்' என உத்தரவிட்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments