FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

மூதாட்டியை கொன்று நகை கொள்ளை

சென்னை எழும்பூரில் அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்துவந்த மூதாட்டியை கொலை செய்து நகை கொள்ளையடிக்கப்பட்டது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

24 ஜனவரி 2024, 10:11 pm IST
பகிர்:

சென்னை எழும்பூரில் அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்துவந்த மூதாட்டியை கொலை செய்து நகை கொள்ளையடிக்கப்பட்டது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
 எழும்பூர் பாந்தியன் சாலையில் கோ-அப் டெக்ஸ் அருகே 9 தளங்கள் கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்பு உள்ளது. இதில் 61 வீடுகள் உள்ளன.
 இதன் 3-ஆவது தளத்தில் உள்ள ஒரு வீட்டில் கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த சாரதா (70) என்பவர் கடந்த ஓராண்டாக வசித்து வந்தார். இவரது சகோதரர் மகள் தான்யா நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார். இவருக்குத் துணையாக இருப்பதற்காகவே கேரளத்தில் இருந்து சாரதா வந்தார்.
 இந்த நிலையில், வியாழக்கிழமை தான்யா கல்லூரிக்குச் சென்றுவிட்டு இரவு வீட்டுக்குத் திரும்பிபோது, வீட்டின் கதவு வெளிப்புறமாக தாழிடப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது சாரதா கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார். அவரது காதுகளும் துண்டிக்கப்பட்டிருந்தன. இதைப் பார்த்து தான்யா அதிர்ச்சியடைந்தார்.
 தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அதில், வீட்டில் தனியாக இருந்த சாரதாவை மர்ம நபர்கள் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றிருப்பது தெரியவந்தது. அவரது காதில் அணிந்து இருந்த நகைகள் கொள்ளை போய் இருந்தன.
 இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து கொலையாளிகளைத் தேடி வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments