குமரி மீனவர்களை மீட்க வேண்டும்: டிடிவி தினகரன் கோரிக்கை
மீன் பிடிப்பின் போது காணாமல் போன கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் 9 பேரை மீட்க வேண்டுமென அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
மீன் பிடிப்பின் போது காணாமல் போன கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் 9 பேரை மீட்க வேண்டுமென அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை: கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் 12 பேர் மற்றும் கொல்கத்தாவைச் சேர்ந்த 2 பேர் விசைப் படகு மூலம் ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்றனர். கடந்த 7-ஆம் தேதி கேரள மாநிலம் கொச்சியிலிருந்து 24 கடல் மைல் தொலைவில், சென்னையிலிருந்து இராக் செல்லும் கப்பல், விசைப்படகின் மீது மோதி பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது. ஆழ்கடலில் நடைபெற்ற இந்தப் பயங்கர விபத்தில் மூன்று மீனவர்கள் உயிரிழந்தனர். இரண்டு மீனவர்கள் வேறு மீன்பிடி படகுகளில் வந்த சக மீனவர்களால் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேரை உள்ளடக்கிய 9 பேரின் நிலை இதுவரை என்னவென்று தெரியவில்லை. உயிரிழந்துள்ள மீனவர்கள் சகாயராஜ், யாக்கோபு, யுகநாதன் ஆகியோர் மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொண்டு, காணாமல் போன மீனவர்கள் 9 பேரை விரைவாக மீட்க மத்திய, மாநில அரசுகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.