FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

சென்னையில் பரவலாக மழை

சென்னையில் பல்வேறு இடங்களில் வியாழக்கிழமை பரவலாக மழை பெய்தது.சென்னையில் கடந்த சில நாள்களாக பகல் நேரங்களில் வெயிலின்

30 ஜனவரி 2024, 9:57 pm IST
பகிர்:


சென்னையில் பல்வேறு இடங்களில் வியாழக்கிழமை பரவலாக மழை பெய்தது.
சென்னையில் கடந்த சில நாள்களாக பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாகக் காணப்படுகிறது. மாலை மற்றும் இரவில் பரவலாக மழையும் பெய்கிறது. இதேநிலை வியாழக்கிழமையும் தொடர்ந்தது. 
சென்னையில் வியாழக்கிழமை காலை முதலே வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. பகலில் கடும் வெயில் நிலவியது.
மீனம்பாக்கத்தில் 100 டிகிரியும், நுங்கம்பாக்கத்தில் 98 டிகிரியும் வெப்பநிலை பதிவானது. வெயில் காரணமாக மக்கள் கடும் அவதிப்பட்டனர். 
மாலையில் வெப்பத்தின் தாக்கம் குறைந்து மேகக்கூட்டங்கள் திரண்டன. 
இந்நிலையில், சென்னையில் பல்வேறு இடங்களில் இரவில் திடீரென மழை பெய்யத் தொடங்கியது. எழும்பூர், வேப்பேரி, மயிலாப்பூர், ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், கோபாலபுரம், பெருங்களத்தூர், வண்டலூர், மீனம்பாக்கம் உள்பட பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து, தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கியது.
ஆவடி, அம்பத்தூர், பட்டாபிராம், திருமுல்லைவாயல் உள்பட பல்வேறு இடங்களிலும் பரவலாக மழை பெய்தது. மழை காரணமாக, பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை சந்தித்தனர். 
வியாழக்கிழமை இரவு 8.30 நிலவரப்படி, சென்னை நுங்கம்பாக்கத்தில் 12 மி.மீ. மழை பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு அதிகாரி வியாழக்கிழமை இரவு தெரிவித்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments